பாவலர் வரதராஜன் பாடல்கள் தவிர்க்க முடியாத தற்காலத்தேவை

- ராஜேஷ் ராஜாமணி

அறிமுகம்:

பொதுவான விவரிப்புகள், உரையாடல்களில் பாவலர் வரதராஜனின் பெயரானது அவருடைய தம்பியும், புகழ்மிக்க இசையமைப்பாளருமான இளையராஜாவோடு அடிக்கடி இணைத்தே குறிப்பிடப்படுகிறது. ‘பாவலர் சகோதரர்கள்’ குழுவின் மூத்தவர் என்று அவர் நினைவுகூரப்படுகிறார். அக்குழுவின் மற்ற இரு ஆளுமைகள் இயக்குநர், இசையமைப்பாளர் கங்கை அமரன், திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் ஆவர். கம்யூனிச கருத்தியலில் தீவிரமான பற்று கொண்டவர் என்பதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அரசியல், தேர்தல் மேடைகளில் தான் இயற்றி, இசையமைத்துப் பாடிய அபாரமான பாடல்களின் வழியாகவும் பாவலர் வரதராஜன் நன்றாக அறியப்படுகிறார். திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படும் இவ்விரு தகவல்களைத் தவிர்த்து, பாவலர் வரதராஜனின் பாடல்கள், அவை பேசும் அரசியல் குறித்துப் பெரிதாகப் பொதுவெளியில் விவாதங்கள் அரங்கேறவில்லை.

பாவலரின் பாடல்கள் அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடப்பட்டதால், அப்பாடல்கள் அந்த இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்கவும் மட்டுமே செய்தன என்கிற தவறான பொதுப்புரிதல் நிலவிவருகிறது. பாவலர் இயற்றிய பல நூறு கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றை வேகமாகப் பருந்துப்பார்வை பார்த்தால் கூட அவை எப்படிப் பலதரப்பட்ட பிரச்சனைகளைக் குறித்துப் பேசுகின்றன, எப்படிக் கட்சி அரசியலின் எல்லைகளைத் தாண்டி பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கின்றன என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும். மேலும் இவரின் கவிதைகள் இசை லயம் ததும்பும் எளிய மொழியில் புரட்சிகரமான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்தன என்பதும் ஆர்வமூட்டுகிறது. இவை போக, பாவலர் எழுதி, மேடையேற்றிய நாடகங்களின் தொகுப்பும் உள்ளது. இக்கவிதைகள், பாடல்கள், நாடகங்கள் எல்லாம் பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளைப் பேசின என்பதோடு அவற்றை உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து பேசின என்பது குறிப்பிடத்தக்கது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!