பூர்வத்தின் மீதான ஆவலாதி இயல்பாகவே நமக்குள் இருக்கும் என்பதை அயோத்திதாசரை வாசிக்கும்போது என்னளவில் உணர்ந்து வருகிறேன். ஓர் அறையின் கதவைத் திறந்து பார்ப்பது போல பண்டிதரின் மூலம் பூர்வத்தில் நான் யார், என்னுடைய வாழ்வியல் முறை எப்படி என்றெல்லாம் திறந்து திறந்து பார்த்து என் பூர்வத்தின் மீதான ஏக்கத்தை வளர்த்து வருகிறேன். அந்தப் பூர்வத்தை இப்போது சாத்தியப்படுத்திவிடும் ஆவலில் அது சார்ந்து இயங்கும் ஆய்வாளர்களுடன் உரையாடி கனவு காண்கிறேன். எப்படியேனும் என் பூர்வத்திற்குள் சென்று அந்த மாண்போடு வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற எனது ஆசை என்னுடைய இந்த ஆயுளில் என்னோடு நேரடியாகத் தொடர்பற்ற ஒன்று. அதாவது, என் மூதாதையர்களுக்கும் எனக்குமான தொடர்பைப் புதுப்பிப்பது. ஆனால், ஒரே ஆயுளில் மீண்டும் பூர்வத்திற்குத் திரும்பமுடியாத தொலைவிற்குச் சென்றுவிட்ட பின் பூர்வத்தின் மீதான ஏக்கம் எத்தனை ரணமானதென உணர்வது துயர்மிக்கது. அந்தத் துயரப் பாதைதான் ‘யாத்வஷேம்’ எனும் இந்நாவல்.
வரலாற்றை இருபக்கமுமிருந்து அணுக வேண்டிய அவசியமில்லாத சமூகத்திலிருந்து வந்த எனக்கு என் சமூகத்தைப் போலவே இழப்பைச் சந்தித்த சமூகத்தவர்களின் மீதான கரிசனை எந்தத் தயக்கமுமற்று பிறந்து விடுகிறது. சர்வாதிகாரத்தின் மீதான வெறுப்பும் அவ்வழியே. சர்வாதிகாரத்திற்கு முன்கதையாக எவ்வளவு நியாயம் இருப்பினும் அதைப் பொருட்டாகக் கருதாத மனநிலையை என் சமூக வரலாற்றிலிருந்தே அடைந்திருக்கிறேன். ஆக, யூதர்கள் யார் எதற்காகக் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்ற முன்கதை எனக்கு அவசியப்படவில்லை. லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்கிற வரலாற்றை வாசிக்கும்போது அப்படியோர் பதபதப்பு. இந்த நாவலில் நாஜிக் கொடுமையிலிருந்து விடுபட்டு பல பத்தாண்டுகளாகியும் கதாநாயகியினுடைய அக்காளின் கணவர் ரொட்டியை அவசரகதியில் உண்ணும் இடம் அப்படியே உறைய வைத்துவிட்டது. நாஜி சிறை அவ்வளவு கொடிய அடக்குமுறையைக் கொண்டிருந்தது என்பதை இந்த ஓர் இடத்தில் துல்லியமாக உணரமுடியுமென நினைக்கிறேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then