மங்கொண், கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள இந்தச் சின்னஞ்சிறிய கிராமம் மகாராஷ்டிராவின் வரைபடத்தில் கிடையாது. நீங்கள் மங்கொண் எங்கே இருக்கிறது என்று ‘கூகுள்’ மேப்பைக் கேட்டால் அது ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கொண்ணுக்கே உங்களை இட்டுச்செல்கிறது. மங்கொண் (கோலாப்பூர்) என்று தேடும்போது மட்டும்தான் பி.ஆர்.அம்பேத்கர் மார்ச் 1920இல் தீண்டாதோர் மாநாடு ஒன்றை நடத்தி, அதன் மூலம் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த அந்த மங்கொண் கிராமத்தை கூகுள் உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது.
மங்கொண்ணைச் சேர்ந்த ஷியாம்ராவ் காம்பிளி என்னும் 80 வயது முதியவருக்கு அந்த மாநாட்டின் நினைவுகள் வழிவழியாக ஊட்டப்பட்டிருக்கின்றன. “அப்போ என் அப்பாவுக்கு ஆறு வயசு. என் தாத்தா அந்த மாநாடு பத்தின கதைகளை அப்பாவுக்குச் சொல்லி வளர்த்தார். என் அப்பா அதை எங்களுக்குச் சொல்லி வளர்த்தார்,” என்கிறார் காம்பிளி.
அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தலித் மக்கள் அந்த இரண்டு-நாள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். சரியாகச் சொல்வதென்றால் 20,000 பேர். மாநாட்டின் இரண்டாவது நாளில் கலந்துகொண்ட கோலாப்பூர் மன்னரும் புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதியுமான ஷாஹு மகாராஜ், தலித்துகள் ஓர் உண்மையான தலைவரைக் கண்டுபிடித்திருந்ததாகச் சொன்னார். “அம்பேத்கர் உங்களை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகத்திறமை வாய்ந்த தலைவர்களுள் ஒருவராகவும் உருவெடுப்பார்,” என்றார்.
பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் மூலம் அம்பேத்கரைப் பற்றி ஷாஹு மகாராஜ் கேள்விப்பட்டிருந்ததாக ஜெய்சிங்ராவ் பவார் தெரிவிக்கிறார். ஜெய்சிங்ராவ் பவார் மராட்டிய – கோலாப்பூர் வரலாறுகளில் நிபுணர். “அப்பதான் தலித் மக்கள் சந்திக்கிற பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை பண்றதுக்காகக் கோலாப்பூருக்கு அம்பேத்கரை அழைத்து வர தத்தோப பவார் (செம்மான் தொழில் செய்பவரான இவர்தான் கோலாப்பூர் நகராட்சியின் முதல் தலித் நகரமன்றத் தலைவர்) என்ற நபரை அனுப்பணும்னு ஷாஹு மகாராஜ் முடிவு பண்ணார்,” என்கிறார் ஜெய்சிங்ராவ் பவார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then