தூப்புக்காரி : தூய்மைப் பணியாளர்களின் உருவாக்கப் பின்னணி

சுப்பிரமணி இரமேஷ்

நாஞ்சில் நாட்டு வட்டாரம் சார்ந்து எழுதும் மலர்வதிக்குத் ‘தூப்புக்காரி’ நாவல்தான் அடையாளம். அவரெழுதிய முதல் நாவல் ‘காத்திருந்த காற்று (2008).’ இந்நாவல் போதிய கவனம் பெறவில்லை. ‘தூப்புக்காரி’ நாவலுக்குச் சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது (2012) கிடைத்த பிறகே மலர்வதி என்ற எழுத்தாளர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஒரு விருது ஓர் எழுத்தாளரிடம் தொடர்ந்து எழுதுவதற்கான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தொடர்ந்து ‘காட்டுக்குட்டி’ என்ற நாவலையும் ‘கருப்பட்டி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டார். ‘நாற்பது நாட்கள்’ என்ற இவரது குறுநாவல், புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. இப்போது மலர்வதி தமிழ் இலக்கியச் சூழலில் பரிச்சயமான முகம். பெரிய இலக்கியப் பின்புலமோ இலக்கிய வாசிப்போ இல்லாத மலர்வதி, விளிம்புநிலை மக்கள் குறித்து நாஞ்சில் நாட்டு வட்டார மொழியில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

மலர்வதியின் புனைவுகள் தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்தே தம் புனைவுகளுக்கான கருவை உருவாக்கிக் கொள்கிறார். மலர்வதியின் இளம் வயதிலேயே இவரது தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்றிருக்கிறார். தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் மாதம் முப்பது ரூபாய் ஊதியத்தில் கழிவறைகளைத் தூய்மை செய்யும் பணியாளராக வேலை செய்திருக்கிறார் மலர்வதியின் அம்மா. இந்த வாழ்க்கை அனுபவத்தைத்தான் ‘தூப்புக்காரி’ நாவலாக எழுதியிருக்கிறார். குடும்பச் சூழல் பத்து வயதில் இவருடைய அண்ணனைக் கல்லுடைக்கச் செய்திருக்கிறது. அண்ணனின் துயரத்தையே ‘காத்திருந்த காற்று’ நாவலாகப் புனைந்திருக்கிறார். இந்தத் தன்வரலாற்றுப் புனைவுத் தன்மையை இவரது சிறுகதைகளில்கூடப் பொருத்திப் பார்க்கலாம். மலர்வதியின் இலக்கியப் பயணம் அவரது வாழ்க்கையின் துயரத்திலிருந்து உருவானது. அதனால் அவரது நாவல்கள் அனைத்துமே தமிழ் நாவல் வரிசையிலிருந்து சற்று மாறுபட்டவையாக இருக்கின்றன. பொதுவாக ஆசிரியர் கூற்றாகப் புனைவில் எழுதப்படுவது பொதுமொழியிலும் கதாபாத்திரங்களின் உரையாடலாக இடம்பெறுவன அக்கதாபாத்திரங்களின் வட்டாரமொழியிலும் எழுதப்படும். ஆனால், மலர்வதியின் புனைவுகளில் ஆசிரியர் கூற்றுக்கூட வட்டார மொழியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. நாஞ்சில் வட்டாரமொழி அறியாத வாசகனுக்கு இது பெரும் தடையாக இருக்கின்றது. இவ்வகையில் மலர்வதியின் புனைவு வடிவம் தனித்துவமானது. தனக்குத் தெரிந்த வாழ்க்கையைத் தனது மொழியில் அளிப்பதையே தனது பாணியாக வைத்திருக்கிறார்.

தகழி சிவசங்கரன் பிள்ளை 1946இல் எழுதிய நாவல் ‘தோட்டியுட மகன்’. ‘தோட்டியின் மகன்’ என்ற பெயரில் சுந்தர ராமசாமியால் 1952இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், 1957இல் ‘சரஸ்வதி’ இதழில் தொடராக வெளிவந்திருக்கிறது. ஆனால் 2000த்தில்தான் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. திருநெல்வேலி பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாகத் தூய்மைப் பணிக்குக் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் கதைதான் நாவல். தூய்மைப் பணியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்திய முன்னோடிப் படைப்பாகத் ‘தோட்டியின் மகன்’ இருக்கிறது. காலந்தோறும் குப்பைக் குவியல்களின் ஊடாகத்தான் தூய்மைப் பணியாளர்களைப் பார்த்துவருகிறோம். தூய்மைக்குப் பின்னால் அவர்களின் முகம் மறைந்துபோகும். குப்பைகளின் பெருக்கம் மீண்டும் அவர்களை நினைவுபடுத்தும். குடும்பம் சகிதமாகத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களின் கடந்தகால வரலாறு மிக மோசமாக இருந்திருக்கிறது. கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலம் இவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது. அதுவொரு தற்காலிக வெளிச்சம்தான். மீண்டும் பழைய நிலை. பொதுச் சமூகம் அவர்களை மனிதர்களாகக்கூட மதிக்கவில்லை என்பதுதான் தகழி தன் நாவலினூடாக வெளிப்படுத்திய உண்மை.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!