குறிப்பு : வேலூரிலிருந்து வெளியான பௌர்ணமி இதழின் ஆசிரியராகவும் வாழும் காலத்தில் தீவிர அம்பேத்கரியவாதியுமாகவும் திகழ்ந்த பெரியவர் டி. குப்புசாமி அவர்களுக்கு காலம் சென்ற அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்கள் 18.8.1993 ஆம் நாளிட்டு எழுதிய கடிதம் இது. அன்பு பொன்னோவியம் சமூகப் பெரியவர்கள் பலரை நேரில் பார்த்தும் அறிந்தும் வந்தவர். தொடர்ந்து இதழ்களை நடத்தியும் நூல்களை எழுதியும் வந்தவர். பல்வேறு ஆவணங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கையளித்து சென்றவர். இன்றைய தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிற அயோத்திதாசர் எழுத்துகள் ஞான .அலாய்சியஸால் தொகுக்கப்படுவதற்கான ஆவணமாக தமிழன் இதழ்களை தந்தவர் இவரே.
கடிதங்கள் தனிப்பட்டவை என்பதால் பகிரங்கப் படுத்தப்படக்கூடாதவை ஆகின்றன. ஆனால் இக்கடிதத்தை இங்கு பகிரங்கப்படுத்துவதற்கு காரணம் இருக்கிறது. இதில் ஒரு வரலாறு வரையப்பட்டிருக்கிறது. எனவே இது பொது ஆவணமாகிறது. முன்னோடிகளின் தனிப்பட்ட உறவுகள் – உரையாடல்கள் கூட சமூகம் சார்ந்தே அமைந்திருக்கின்றன என்பதை இதில் அறிந்துகொள்ளலாம். அனுபவசாலி ஒருவரின் சமூகத்திற்கான வழிகாட்டுதல் போல இப்பிரதி அமைந்திருக்கிறது.
பொதுவாக ஆவணக் காப்பகச் சான்றுகளைத் தாண்டி தனிநபர்களால் பாதுகாக்கப்பட்ட – பகிரப்பட்ட பதிவுகளும் கூட வரலாற்றுச் சான்றுகளாவதுண்டு. அந்த வகையில் தான் ஒரு வரலாற்று ஆவணமாக கருதி இக்கடிதம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அன்பு பொன்னோவியம் எழுதுவதில் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கக் கூடியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இக்கடிதம் அதற்குச் சான்று. அடித்தல் திருத்தல் எதுவுமில்லை. குண்டு குண்டான கையெழுத்தில் செய்நேர்த்தியின் நுட்பத்தோடு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு தனிப்பட்ட கடிதத்தை பொது ஆவணமாகக் கருதி நகலெடுத்து தந்த காலம்சென்ற பெரியவர் டி. குப்புசாமி அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then