ச.அர்ஜுன் ராச் கவிதை

கோடை விடுமுறை முடிந்து திரும்பியிருந்தேன் ​
வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரிவு ​
ஏதோ ஓர் ஏமாற்று ஏற்பாடாகியிருந்ததை​
உணர்ந்தேன் ​
அதை முற்பட்டறிய ​
சுற்றும் முற்றும் பார்த்தும் பலனில்லை ​
முற்றத்தில் ஒரேயொரு செடியில் பூத்திருந்த ​
ஒரே ஒரு பூ உதிர்ந்ததுபோல​
கலக்கமுற்றேன் ​
வழக்கமாக​
எதுவென்று தெரியாதவற்றைக் குணப்படுத்தும்
சாளரத்திடமே போனேன்​
அது விலகி விலகிப் போய் ​
வீதியின் அந்தப் பக்கம் நின்றது ​
என் வீடு​
எதிர்த்த வீட்டில் பூட்டப்பட்டிருந்தது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!