“கலையும் கலாச்சாரமும் மக்களின் சொத்து” – தொல்லியல் ஆய்வாளர் தயாளன்

சந்திப்பு: அருள் முத்துக்குமரன்

தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாளராகப் பணியில் சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பாலும் திறமையாலும் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநராக வளர்ந்தவர் தயாளன். தொல்லியலின் அடிப்படையில் பௌத்தத்தை அணுகும் முறையைத் தொடங்கி வைத்ததில் முன்னோடியாகத் திகழ்கிறார். தன்னுடைய பணிக்காலத்தில் 12 அகழ்வாய்வுகளை நடத்தியுள்ளார்.

தொல்லியல் ஆய்வியல் அறிஞராகத் தமிழ்ப் பகுதிக்கென்று தனிப் பௌத்தம் இருக்கிறது என்று கூறும் பீட்டர் சால்க் உடன் இணைந்து எழுதிய புத்தகம் உட்பட 13 புத்தகங்கள், 70 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தொல்லியல் துறையில் இவரின் சிறந்த பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசு 2010இல் Dr. B.R.Ambedkar Award for Excellence மற்றும் Padma Bhushan Dr.C.Sivaramamurti Award போன்ற விருதுகளை வழங்கியது.

 

குடும்பப் பின்னணி

வேலூர் மாவட்டத்திலுள்ள சூரை என்கிற குக்கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அங்கு இன்றும் சரியான பேருந்து வசதியில்லை. இளமைப் பருவத்தில் மின்சார வசதிகூட எங்கள் பகுதியில் கிடையாது. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத தந்தைக்கும் படிப்பறிவில்லாத தாய்க்கும் மகனாகப் பிறந்தேன். எங்கள் பகுதியில் மழையை நம்பியே நிலங்கள் இருக்கும். அதில் எங்களுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது, அதுமட்டுமே எங்களின் வாழ்வாதாரம்.

 

பள்ளி, கல்லூரி வாழ்க்கை மற்றும் M.C.ராஜா விடுதியில் தங்கிப் படித்த அனுபவம்:

ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே படித்தேன், பின்பு நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழிங்கம் எனும் ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தேன். சில நேரங்களில் பேருந்திலும் பல நேரங்களில் நடந்தும் பள்ளி சென்றுவந்தேன். இளங்கலை பயின்ற பின்பு பொருளாதாரச் சூழ்நிலையால் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக கிராமத்திலேயே முடங்கிக் கிடந்தேன். அந்தக் காலங்களில் நான் இருந்த சூழ்நிலையும் அனுபவித்த கஷ்டங்களும் எதிர்காலத்திற்கு ஊன்றுகோலாக அமைந்தன.

ஊர் மக்களும் நண்பர்களும் என்னிலும் இளைய மாணவர்களும் கூட, ‘இவ்வளவு படித்திருந்தும் வேலை இல்லாமல் சுற்றிவருகிறான்’ என்றும், ‘இனி விவசாய வேலை அல்லது கூலி வேலைக்குத்தான் போகணும். படிப்பதற்கு லாயக்கற்றவன்’என்றும் கூறினர். இன்னும் சிலர் ‘டவுனில் ஹோட்டலிலோ மெக்கானிக்காகவோ வேலைக்குச் சேர்ந்துவிடு’என்று அறிவுரை கூறினர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியோ, ரேடியோவோ இல்லாத எங்களுடைய கிராமத்தில் அடைந்து கிடந்த எனக்கு, வெளிஉலகைப் பார்ப்பதற்கும் மேல்படிப்பு படிப்பதற்கும் ஆசை வந்தது. தொலைபேசிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில் நண்பர்களுக்குக் கடிதங்களை அனுப்பி வந்தேன். அதில் ஒரு நண்பர், “M.C. ராஜா விடுதி ஒன்று உள்ளது அங்கே நமக்கு உணவும் இடமும் இலவசமாகக் கிடைக்கும். என் நண்பரும் அங்கே தங்கியிருக்கிறார். நீ சென்னை கிளம்பி வந்தால் அவ்விடுதியில் தங்கிக்கொள்ளலாம்”என்று கூறினார். கையில் உள்ள சொற்பப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னையிலுள்ள விடுதியின் மேலாளரைச் சந்திக்கச் சென்றோம். அவர் எங்களிடம், ‘முதலில் நீங்கள் ஏதாவதொரு கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் விடுதில் சேர முடியும்’என்று கூறினார். சரி என்று கல்லூரியில் சேர்வதற்கு முயன்றோம், ஆனால், அனைத்துக் கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்துவிட்டதாகக் கூறினர். கடைசியாக மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் (M.C.ராஜா விடுதி) துறையில் இடம் கிடைத்தது. அதன் பின்பு நாங்கள் M.C.ராஜா விடுதியில் சேர்ந்தோம். ஒன்றரை ஆண்டுகாலமாக இருந்த மனஉளைச்சல், இந்தச் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இளங்கலையில் புவியியல் துறை படித்து, முதுகலையைத் தொல்லியல் துறையில் கற்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று இரவிவர்மா தங்கப்பதக்கம் பெற்றேன். இது என் உழைப்புக்குக் கிடைத்த முதல் வெற்றியாக நினைக்கிறேன்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger