அழகிய பெரியவன் கவிதைகள்

இளம் ஒளிப்பொருள்

என் முன்னால்
இளம் ஒளிப்பொருளாய்
கலங்கிய கண் கொண்டு
ஏங்கியபடி அமர்ந்திருக்கிறது
இந்த அதிகாலை
இதை மேலும் அழச்செய்கிறது
காற்றில் ஒலியிழைக்கும் பறையிசை

பறையின் சாத்தியக்கூறுகள் பலவுண்டு
இந்தக் காலையிலது
பெருநாட்கல்லது பிறநாளுக்கு அறையாச்
செல்வச்சேனை வள்ளுவ முதுமகன்
கையிருந் தப்பறை
காலத்தின் நீள்சமவெளியில் உருண்டுருண்டு
ஜீன்சும் கடுக்கனும் அணிந்தபடி
அறைபவனின் கைகளில் சேர்ந்தின்று
ஒரு மரணத்துக்கு இசைக்கப்படலாம்

அக்கணம் சிணுங்கிடும் கைப்பேசி
மூளையை உறையச் செய்திடும்
பனிச் சொற்களை
உங்களிடம் கையளிக்கும்படி
வைத்துக்கொண்டு தவிக்கலாம்

அல்லது
முதுமையில் கிடக்கும்
அம்மையையும் அப்பனையும்
கடந்த இரவில் பற்றிய
புதிய நோய் ஒன்றின்
செய்தி கிட்டலாம்.

 

எம் அடுப்படி

மண்ணடுப்பு
சூட்டியடுப்பு
செத்த செனார்
எருமுட்டை
வெறகு, ஊதாங்கோல்

சட்டி, பானை
காங்கு, கல்சட்டி
பருப்புச்சட்டி
குண்டா, இட்லிகுண்டா
டேக்சா, தண்ணிமொடா

கரண்டி, அன்னக்குத்தி
அகப்பை, கபிகிரி
ஏனம், சாணக்கை
பொகனா
கிண்ணி, கொட்றா

மொந்தை
பஞ்ச பாத்திரம்
இரும்புக்கடாய்
தோசைக்கல்லு
அம்மிக்கல்லு
ஒரலு, ஒலக்கத்தடி
களிக்கோல், கவுர்தடி
மத்து, தட்டுக்கூடை
புட்டுக்கூடை, உண்ணிக்கூடை
முறம், பிரிமணை
அறுவாமணை, அடத்தை
ஆடும் உரி

ஏந்திரக்கல்லு, குண்டாங்கல்லு
வெட்றா, கத்தி
அறுவா, சூரிகத்தி
மரக்கால் சேர்
படி பாசேர்
ஒழக்கு ஆழாக்கு

களி பழையகளி
பழுது பழையக்கஞ்சி
நொய்யரிசி ரேசனரிசி

பச்சப்புளி பர்புட்டு
பருப்புக் கொளம்பு
பழையக் கொளம்பு
சுண்டக் கொளம்பு
சுடக்கொளம்பு
தக்காளிபஜ்ஜி
கறிக் கொளம்பு
காளாங் கொளம்பு

 

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!