அந்த நிலமே தீக்கோலமானது. உயிரோடு வேகும் மனிதர்களின் திக்கற்ற மரண ஓலம்; கொழுத்து ஆடும் நெருப்புக்குப் பின்னே பகடி வடியும் ஆணவச்சிரிப்பு; கருணையற்ற பயங்கர பேயின் உறுமல்; தீய்ந்து கருகும் மானுட அலறலைத் தாண்டிக் கேட்கிறது. குடிசையில்
எரிந்து பொசுங்கும் மனிதர்களின் மரண ஓலத்தை விடவும் அந்தக் குரூரச் சிரிப்பில் பயந்துவிட்டவன் அந்தப் பயங்கரக் காட்சியிலிருந்து வெளியேறப் போராடிக்கொண்டிருந்த கணத்தில், காட்சிகள் மெல்ல மறைந்தாலும் மரண அலறல்கள் அவனுக்குக் கேட்டபடிதானிருக்கின்றன…
“எங்க உழைப்பாலதானடா இந்த நிலம் இப்படி விளைஞ்சி கொட்டுது. எங்க உழைப்பு இல்லாம உங்க வேல் கம்பும் சாட்டையும் வீச்சறிவாளுமா உங்க தடித்த கைகளையும் உங்க ஆண்டைகளோட தொந்தியயும் வளர்க்குது… எங்க உழைப்புடா! உழைப்புனா என்னன்னு தெரியுமா உனக்கு? வறுமை தாங்காம அரைபடி நெல்ல கூட்டிக் கேக்குறம், அது குத்தமா? வயிற்றுப் பிழைப்புக்கு அடியாளா இருக்குற
உன்னையும் ஒரு ஆத்தாதானடா வலியப் பொறுத்துகிட்டு
யோனியிலருந்து பிடுங்கிப்போட்டா… சீ உன்னை விட நாய்கள் மேல்.”
“ஒளிஞ்சிருந்து பேசுற அடிமை நாயே உன்னோட பொறப்பு அப்படி; என்னோட பொறப்பு இப்படி; எல்லாம் விதிடா முட்டாள்; அதுக்கு ஏத்தபடி நடக்கறதுதானடா உனக்குத் தர்மம். அரைபடி நெல்லு கேக்கறவன் பணிஞ்சி வந்து மிராசுகிட்ட கேட்டா இல்லன்னா சொல்லுவாரு. உனக்கெதுக்குடா கொடி, சங்கமெல்லாம். மிராசை மீறி இந்த மண்ணுல உங்களால பொழைச்சிட முடியாதுன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டல்ல, வாடா எம் முன்னால. இதுங்களோட சேத்து உன்னையும் தலையச் சீவி நெருப்புல போடுறன்.” “உழைப்பவன் அருமை தெரியா அடிமைப் பயலே, எங்கிட்டயும் ஒரு வீச்சறிவாளக் குடுத்துட்டுச் சரிக்குச் சமமா மோதக் கூப்புட உனக்குத் திராணியிருக்காடா?”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then