கறுப்புத் திரை 6 – ஜா.தீபா

எல்லாக் கதைகளும் சொல்லியாகிவிட்டன. புதிதாய் இனிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. துயரங்கள் அனைத்தும் இன்று காலாவதியாகிவிட்டன. அமெரிக்கா மாற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டார். எல்லாம் மாறிவிட்டன. இனிப் பழைய பாணியில் அடிமைகளாக இருந்த கதையைச் சொல்லும் நிலையில் இல்லை என்பதுதான் ஆப்பிரிக்க, அமெரிக்கப் படங்கள் குறித்த பேச்சாக இருந்தது. அப்போதுதான் இந்தப் படம் வெளியாகிறது – Django Unchained. இதனை இயக்கியவர் க்வென்டின் டாரன்டினோ (Quentin Tarantino).

1858ஆம் வருடம் மிஸிஸிப்பி மாகாணம் ஆப்பிரிக்க அடிமைகளை விற்பதிலும் பெறுவதிலும் பரபரப்பாக இருந்த காலகட்டம். ஜாங்கோ என்பவன் பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்படுகிறான். அவனை அவர்களிடமிருந்து விடுவிக்கும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவரான ஸ்கல்ட்ஸ் என்பவர் அவனைத் தன்னுடைய உதவியாளராகச் சேர்த்துக் கொள்கிறார். ஜாங்கோவை அவனுடைய மனைவியுடன் சேர்ப்பதற்கும் உதவுகிறார். ஜாங்கோவின் மனைவி ஏற்கெனவே ஒருவருக்கு அடிமையாக விற்கப்பட்டவர். அவரை விலைக்கு வாங்கியவர் சற்று ஆபத்தான மனிதர். அவரிடமிருந்து சாதுரியமாக ஜாங்கோவின் மனைவியை விடுவிக்க வேண்டும் என்பது இருவரின் திட்டம். அது நிறைவேறுவதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பது டாரன்டினோ நமக்குச் சொன்ன கதை. இதோடு அடிமை ஒருவன் எப்படி வெள்ளை இனக் குற்றவாளிகள் வேட்டையாடும் ஒருவனாக மாறினான் என்பதும்தான்.

அமெரிக்காவில் 245 வருடக் காலமாக ஆப்பிரிக்க வம்சாவளியினர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். கொத்தடிமைகளாக அவர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவுகளும் அவர்கள் சட்ட உரிமை பெற்ற காலத்தைச் சொல்லும் படங்களும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்தப் படம் வித்தியாசப்படுவதற்குக் காரணம், கதை சொன்ன விதமும் டாரன்டினோவின் இயக்கமும்தான். பொதுவாக டாரன்டினோ படங்களைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும், அவர் எந்தக் காட்சியில் அல்லது காட்சியின் எந்த மடிப்பில் நமக்குத் திகைப்பை வைத்திருப்பார் என்பது யூகிக்க இயலாது. இரண்டு பெண்கள் மிக வன்மையாக இரத்தம் வருமளவு ஒரு வீட்டிற்குள் குத்துச்சண்டை, கத்திச்சண்டை எல்லாம் போடுவார்கள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!