காலனிய நீக்கம் என்பது பெரும்பாலும் அறிவார்த்த மேலாதிக்கத்தின், அறிவுசார் முறைகளில் மேலாதிக்கம் (காலனியம்) செலுத்தும் பண்பாட்டின் மீதான விமர்சனமாக மட்டுமல்லாமல் அவற்றை ‘உள்நாட்டு’/‘உள்வட்ட’ அறிவு முறைமைகளாலும் நடைமுறைகளாலும் பதிலீடு செய்வதற்கான கோரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காலனிய நீக்கம் என்பது அறிவியல், மருத்துவம், தத்துவம், கல்வி, வளர்ச்சி மற்றும் மேற்கல்லாத சமூகங்களின் அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் ‘மேற்கத்திய’ அறிவு முறைமைகளைப் பதிலீடு செய்வது, மாற்றியமைப்பது என்பதற்கு அழைப்புவிடுப்பதாக இருக்கிறது. மேலும், இது மேற்கல்லாத சமூகங்களின் கல்வி, அறிவு முறைமைகள், அரசியல் செயல்முறைகள் ஆகியவற்றோடு ஒருங்கிணைந்திருக்கும் ஐரோப்பியமைய மாதிரிகள் உலகளாவியதல்ல என்றும், அவை உள்வட்ட மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் அறிவுசார் உருவாக்கங்களால் பதிலீடு செய்யப்பட வேண்டும் என்றும் இனங்காண்பதாக இருக்கிறது.
காலனிய நீக்கம் என்பது பல்கலைக்கழகம், ஆசிரியத்துவம், பாடத்திட்டம், நூலகம், ஆராய்ச்சி முறைகள் மற்றும் குறிக்கோள்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த கருத்துகள், மனிதராகவும் சமூகமாகவும் இருப்பதற்கான வழிமுறைகள் போன்ற பரந்துபட்ட நடவடிக்கைகளையும் சமூக அமைப்புகளையும் தூய்மையாக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாகச் சொல்வதென்றால் மருத்துவம், கணிதம், கல்விமுறை, அகிலம், சமூகம் குறித்தான கதையாடல் போன்ற பல துறைகளில் வெவ்வேறு இனங்களால் உருவாக்கப்-பட்டிருக்கும் பலவிதமான அறிவு முறைகளை நமக்குக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. பெம்பி (mBembi), மிங்கலானோ (Mingalono) போன்ற அறிஞர்களெல்லாம் பன்முகத்தன்மை, அறிவுசார் வேறுபாடுகள் போன்ற கருத்துகளை அடிப்படையாகக்கொண்டே ஓர்ம அகண்டம் என்பதற்கு (University) பதிலாக பன்மை அகண்டம் (Pluriversity) என்பதற்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then