கண்ணனைக் கொல்லும் கர்ணன்

- சந்துரு மாயவன்

மகாபாரதம் எனும் பெருங்கதையாடல் இந்தியப் பெருவெளி எங்கும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்திருக்கிறது. கதைகள், வழக்காறுகள், திரைப்படங்கள், நிகழ்த்து கலைகள், பண்டிகைகள் என மகாபாரதக் கதைகள் நம்மைப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மகாபாரதத்தின் உபபிரதியாகவே பகவத்கீதை உள்ளது. பகவத்கீதை வர்ண அடுக்குகளின் நியாயத்தைப் பேசுகிறது. மகாபாரதத்தை விநாயகன் சொல்ல வியாசன் எழுதியதாக ஒரு கதை உண்டு. வில்லிப்புத்துரார் பாரதம், வியாசர் பாரதம், நல்லாம்பிள்ளை பாரதம் என்று பல பாரதக் கதைகள் நம்மிடம் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் மகாபாரதக் கதைகள் வட இந்திய மொழிகளில் மட்டுமல்ல தென்னிந்திய மொழிகளிலும் மீளுருவாக்கம் செய்து எழுதப்பட்டுள்ளன. மகாபாரதத்தை அடியொற்றி வந்த பிரதிகளுக்குச் சாகித்ய அகாடமி விருதுகளும் வாய்த்திருக்கின்றன. ஒரு தொன்மத்தை, வரலாற்றைச் சமகால அரசியல் தேவையையொற்றி எழுதுவதென்பது காலங்காலமாய் நிகழ்வதுதான். நற்றிணையில் ‘ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி’ (நற் – சுபு6) என்பது கண்ணகி என்றும், மக்கள் வழக்காறுகளில் இருந்த கதையே பிற்காலத்தில் சிலப்பதிகாரமாக உருப்பெற்றதென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படியொரு பிரதி காலந்தோறும் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு கடத்தப்படுவது இயல்பான ஒன்றுதான். மகாபாரதக் கதை பல்வேறு மாறுதலோடு மீள்வாசிப்புக்கு உட்பட்டே வந்திருக்கிறது. மகாபாரதத்தை அடியொற்றி தமிழில் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதியின் பாஞ்சாலி சபதம், ராஜாஜியின் மகாபாரதம் (வியாசர் விருந்து), சோ.ராமசாமியின் மகாபாரதம் பேசுகிறது, எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், ஜெயமோகனின் வெண்முரசு, நதிக்கரையில், வடக்கு முகம், பத்ம வியூகம் உள்ளிட்ட கதைகள். பாலகுமாரனின் கடவுள் வீடு, கிருஷ்ண அர்ஜுனன், தனிமைத் தவம், பெண்ணாசை போன்றவை வந்துள்ளன. பிரபஞ்சனின் மகாபாரதம், ஈழத்து எழுத்தாளர் தேவகாந்தனின் கதாகாலம் உள்ளிட்டவை தமிழ்ப்புனை கதைகளாக வந்துள்ளன.

பிறமொழிகளில் எம்.டி.வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம், எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா (தமிழில் பாவண்ணன் பருவம் என்று மொழிபெயர்த்திருக்கிறார்), சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் (தமிழில் கர்ணன்), பிரதிபா ரேயின் யக்ஞசேனி, கே.எம்.முன்ஷியின் கிருஷ்ணாவதாரா, வி.எஸ்.காண்டேகரின் யயாதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத்தின் திரௌபதி (தமிழில் திரௌபதி) என்று தமிழைத்தாண்டி மகாபாரதத்தைத் தழுவிய கதைகள் வந்துள்ளன. தமிழில் கர்ண மோட்சம், திரௌபதி உள்ளிட்டவை நாடகங்களாகவும் கூத்தாகவும் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன. திரைப்படங்களாக வி.மதுசூதன ராவ்வின் வீர அபிமன்யு, எம்.சோமசுந்தரம், ஏ.காசிலிங்கம் இணைந்து இயக்கிய அபிமன்யு (இணை வசனம் மு.கருணாநிதி), பி.ஆர்.பந்தலுவின் கர்ணன், மணிரத்னத்தின் தளபதி உள்ளிட்ட திரைப்படங்களும் மகாபாரதக் கதையை அடியொற்றியே வந்திருக்கின்றன.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!