அருகிய பறவைகளின் துயரோசைகள்

- கமலக்கண்ணன் கோபிநாத்

“என்னைச் சுற்றி எண்ணிலடங்காத் தீயோர் உள்ளனர். என் தலைமுடியைக் காட்டிலும் அதிகமான என் பாவங்கள் என்னைத் தப்பவிடாமல் சூழ்ந்து பிடித்தன; நான் தைரியம் இழந்தேன்; கர்த்தாவே என்னைக் காப்பாற்றும்!” – சங்கீதம் (40:12)

அதிகாரத்தின் மீவிழைவு, எந்த நேரத்திலும் தன் இரும்புக்கரங்களைத் தயாராக வைத்திருக்கும்; எதற்கு? குருதிச் சதுரங்கம் விளையாட! அதற்கு மக்களே உழைத்து தம்மை உயர்த்தவும் வேண்டும், தேவைப்பட்டால் அவர்களைப் பலிகொடுக்கவும் முடியும். அந்தக் குருதியாட்டத்தில் மக்கள் சிப்பாய் காய்கள்.

ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இராணுவ ஆட்சியை நிறுவிய தொடக்க காலத்தைக் களமாக எடுத்துக்கொள்கிறது லாவ் டயஸின் (Lav Diaz) From What Is Before (2014) திரைப்படம். இரண்டு முறை மட்டுமே நாட்டின் குடியரசு தலைவராக இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதியை மீறுவதற்குத் குதர்க்கமாக ஒரு திட்டம் தீட்டுகிறது மார்கோஸ் அரசு. தனது பதவிக்காலம் முடிவதற்கு வெறும் இரண்டு நாட்கள் முன்பு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சியை நிறுவிக்கொள்கிறது. அதன் வழியே சாசுவதமாக ஆளலாம் என்ற சாத்தானின் சிரிப்பொலி அரசின் அகத்தில் எதிரொலிக்கிறது.

எப்போது சர்வாதிகாரிகள் தனக்கு நெருக்கமான, தன் இனக்குழுவைச் சார்ந்தவர்களை நம்பிக்கைக்குரிய சிறு படையாக அமைத்துத் தக்கவைத்துக்கொள்வதுண்டு. அவர்களைக்கொண்டு, உள்நாட்டு எதிரிகளையும் எதிரிகளாகச் சாத்தியமுள்ளதாகக் கருத இடமளிப்பவர்களையும் எளிதாக இனம் காணலாம்; சித்ரவதை செய்யலாம். பிடிக்காதவர்களை வறுத்-தெடுக்கும் கூடுதல் வாய்ப்பும் உண்டு. இங்கும் அப்படி சிலர் நீதியை நிலைநாட்டுவதற்கான காவலர்கள் என்ற பதாகையை நெற்றியில் தாங்கி பிலிப்பைன்ஸின் மாதிரி சிறு கிராமத்திற்குள் நுழைகின்றனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!