நான்கு குறுங்கட்டுரைகள்

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி, தமிழில்: வே.நி.சூர்யா

1.கவிதையின் சொல்லப்படாத சிடுமூஞ்சித்தனம்

கவிதையின் தனிப்பெரும் ராஜ்ஜியமான அக உலகம், அதன் விவரிக்க இயலாத அம்சத்தால் வகைப்படுத்தப்படுகிறது. அது காற்று போல; நிச்சயமாக அங்கு உண்மைகள், பதற்றங்கள், வெப்பநிலை வேறுபாடுகள் உள்ளன ஆனால் அதன் பிரதான சிறப்பியல்பு முழுமையான வெளிப்படைத்தன்மையே. இந்த அக உலகம் தன் விவரிக்க இயலாத தன்மையினால் மேலதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினால் அதை எப்படிச் சாதிக்கும்? அக உலகம் தந்திரத்தைக் கைகொள்கிறது. புற யதார்த்தத்தில் ஆர்வத்துடன் இருப்பதாகப் பாசாங்கு செய்கிறது. ஓ, ஆமாம், புற யதார்த்தத்தில் அவ்வளவு ஆர்வம். ஒரு பெரிய தேசம் வீழ்ச்சியில் இருக்கிறதா? அக உலகம் பரவசமடைகிறது: அதற்கு ஒரு பேசுபொருள் கிடைத்துவிட்டது! மரணம் அடிவானத்தில் தோன்றுகிறது. அக உலகம் – தன்னை அழிவற்றதாக நினைக்கிறது – உற்சாகத்தில் நடுங்குகிறது. யுத்தமா? பிரமாதம். துன்பமா? சிறப்பு. மரங்களா? மிதமிஞ்சி மலர்ந்த ரோஜாக்களா? இன்னும் சிறப்பு. யதார்த்தம்? மிக நன்று. யதார்த்தம் தெள்ளத் தெளிவாகவே தவிர்க்க முடியாதது; அது இல்லை என்றால், ஒருவர் அதை கண்டுபிடிக்க வேண்டும்.

கவிதையோ யதார்த்தத்தை ஏமாற்ற முயல்கிறது; யதார்த்தத்தின் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்
கொள்வதாகப் பாசாங்கு செய்கிறது. தெரிந்தே தலையை ஆட்டுகிறது. ஆ! அது சொல்கிறது, மற்றொரு நிலநடுக்கம். மறுபடியும் அநீதி. வெள்ளம், புரட்சிகள். மீண்டும் யாரோ ஒருவர் முதுமையடைந்துவிட்டார். கவிதை தனது ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறது. என்றாவது ஒரு நாள் கவிதையின் இதயம் இரக்கமற்றதாக இருப்பதை யதார்த்தம் அவதானிக்கலாம். அந்தக் கவிதைக்கு இதயமே இல்லை, உள்ளதோ பெரிய விழிகளும் பிரமாதமான செவியும் மாத்திரமே. அப்போது உடனடியாக யதார்த்தம் புரிந்துகொள்ளும்: அந்த விழிகளும் செவிகளும் கவிதைக்கான படிமங்களின் ஆழம்காணமுடியாத தோற்றுவாய் மட்டுமே, பின்பு அவை மறைந்துவிடும் என்று. உலகில், கவிதை தனியாக இருக்கும், ஊமையாக, வெறுமையாக, சோகமாக மேலும் தொடர்புறுத்த இயலாததாக.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!