“பௌத்தம் பற்றியான கதையாடல்கள் 1850களில் துவங்குவது… பிரதிகளைக்கொண்டு பௌத்தத்தை ஆராய்வதே முக்கிய அறிவுச்செயல்பாடாகக் கருதப்பட்டது. இப்பிரதிகளைப் பொருள் ரீதியாகக் கைக்கொண்டிருப்பதன் மூலம் மேற்குலகம், பௌத்தத்தைத் தன்வசப்படுத்திக்கொண்டது. இவ்வுரிமையைக் காட்டிக் கருத்தியல் ரீதியாகப் பௌத்தத்தைக் கட்டுப்படுத்தியது.”
– பிலிப் அல்மண்ட்.
“பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் வந்து தோன்றி அவரவர்கள் சமயாசார நூற்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் வேஷ பிராமணர்களால் புத்த தன்மம் சீர்குலைந்து வேஷ பிராமணர்கள் செல்வாக்கு மிகுந்திருந்தபடியால் அவர்களுக்குப் பின்பு தோன்றிய மகமதிய ராஜாங்கத்தாரிடமும் அதன்பின் தோன்றிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரிடமும் தங்கள் வாக்கை ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையில் வைத்துக்கொண்டார்கள்.”
– பண்டிதர் அயோத்திதாசர்.
இந்தியாவில் நவீனம் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உருப்பெற்றது என்று அறிகிறோம். இதனை காலனிய காலத்திலிருந்து உருவான நவீனமாகக் (colonial modernity) கொள்ளலாம். புதிதாக உருவான ‘பொது’ என்கிற வெளி, அச்சுப் பண்பாடு இவற்றினூடாக உருவான தேசிய – தேச கருத்தாக்கங்களும் இணைந்து நவீனம் என்பது வரையறுக்கப்படுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then