மகளே
மல்லிகை மலரைக்
காணாதபோது
அந்தப் பாவப்பட்ட தேனீ
என்ன செய்ததென்று
தெரியுமா?
செக்கச் சிவந்த
அசோக மலர்களில்
போய்விழுந்தது
தீப்பாய்வதைப்போல் (2238)
ஆணும் பெண்ணும் இணைந்து மகிழ்தல் என்பது, மூச்சுவிடுவதுபோலும் இதயம் துடிப்பதுபோலும் தண்ணீர் குடிப்பதுபோலும், அவ்வளவு இயற்கையாக, அவ்வளவு அனிச்சையாகத் திட்டமிடாமலும் தான்தோன்றியாயும் நிகழவேண்டும். ஆனால், இந்த உலகில், எந்தக் காலத்திலும் எந்த ஊரிலும் எந்த மொழி பேசுவோரிடமும் எந்த ஒரு மக்கள் கூட்டத்திலும் இம்மாதிரியான இயல்புகதியில் எதுவும் மலர்ந்து மணம் பரப்புவதாகத் தெரியவில்லை. மூட்டம் போட்டுத்தான் கனிகள்; நீர் ஊற்றியும் வேலி போட்டும்தான் பூக்கள்; கோணல் நிமிர்த்தித்தான் மரங்கள்; செயற்கையாய் மேகங்கள் கலைத்துத்தான் மழை என்றான பிறகு மொட்டு அரும்பு பயிர் பச்சை எல்லாம் வலிந்தும் நயந்தும் பிறப்பவையே! இது தொல்வாழ்விலாகட்டும், கைப்பேசியிலேயே புணர்ந்து சலித்துவிடும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு நடப்பில் தானாகட்டும், சிற்சில வேறுபாடுகளுடன் பெரும் மாற்றங்களின்றி இப்படித்தான் தொடர்ந்து நிகழ்ந்து- கொண்டிருக்கிறது. ஒரு முழு எண்பது அல்லது தொண்ணூறு வயது வாழ்விலும், அபூர்வமாய்ப் பூக்கும் மிகச்சில கணங்களே, மனிதராக நாம் உயிர்த்திருப்பதற்கான அடையாளங்களாகத் துடித்துக்கொண்டிருக்கின்றன. இத்துடிப்புகளைக் கவிதைகளில் அல்லாமல் வேறெங்கும் பேரனுபவத் தூண்டுகோல்களாகத் தரிசித்துவிட முடியாது. அதிலும் நம் அகக்கவிதைகளில், இது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் அலைமோதி ஆர்ப்பரிக்கும் மனித வேகம், திசுக்களெங்கும் சீறிப் பாயும் கட்டுக்கடங்காத குருதி ஓட்டத்தின் சுடலை நடனமாய்ப் பேயுரு கொண்டெழுகிறது. இதன் ஒவ்வோர் உஷ்ண மூச்சும் நமக்குத் தெளிவாகக் கேட்கிறது; அடங்காது ஆடும்வரைதான் அதற்கு ஜீவன்; இருளைத் தின்று ஒளியைக் குடிக்கும் மனுஷ்யச் சாயையின் நித்தியத் துடிப்பது. இத் துடிப்பையே காஹா சத்தசஈயில் பார்க்கிறோம்; கேட்கிறோம்; சிந்திக்கிறோம்.
அகத்தைக் காட்டலாகாப் பொருளாக நம் மரபு வரையறுக்கிறது. இக்காட்டலாகாப் பொருளைச் சொற்களில் எவ்வளவு தூரம் காட்ட முடியும் என்பதே, அகக்கவிதையின் முன்னுள்ள சவால். ஏன் அகத்தைக் காட்ட இயலாது என்றால், நம் அகத்தை அதன் நிஜ வடிவில் காண, நமக்கே பயமாக அல்லது கூச்சமாக இருக்கிறது என்பதே பதில். அதனாலேயே ஒரு சுயத்தணிக்கையும் பின் ஒரு சமூகத்தணிக்கையும் நிகழ்ந்தேறிக் கடைசி வண்டலின் உருத்திரிந்த மிச்ச சொச்சமே கவிதையாகக் கனல்கிறது. இந்த அளவில், உணர்வின் நிழலாக எஞ்சும் ஒரு தேய்பிறையையே முழுநிலவாகக் கண்டு விட்டதாகப் பூரித்துப் பெருங்கணமொன்றில் உறைகிறோம். இந்தப் பெருங்கணங்களின் செம்மையாகத் தணிக்கை செய்யப்பட்ட உணர்வுருவங்களைச் சங்க இலக்கியமாகக் கொண்டால், அவற்றின் கரட்டு வடிவத் தணிக்கை மீறல்களாக அல்லது அப்படியான பாவனைகளாகச் சத்தசஈயின் பாடல்களைக் கொள்ளலாம். கற்புத்திண்மையைச் சங்க இலக்கியங்களிலும் கற்புநெகிழ்வைச் சத்தசஈயிலும் பார்க்க முடிவதாகப் பரவலாகப் பொதுக்கருத்திருக்கிறது. திராவிடம் – ஆரியத்திற்கான அடிப்படை வேறுபாடாகவும் இது சுட்டப்படுவதுண்டு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then