Arya என்கிற சமஸ்கிருதச் சொல்லும் யுசலைய என்கிற பாலி மொழிச் சொல்லும் ஒன்றே என்கிற புரிதல் இங்கு இருக்கிறது. தமிழில் இரண்டுமே ஆரியன் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் பாலியில் உச்சரிப்பு அரியன். இரண்டும் ஒரே வார்த்தையாகக் கருதப்பட்டாலும் இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் மொழியைத் தாண்டியவை.
வேதங்களிலும் புராணங்களிலும் நீதி நூல்களிலும் ஆரியன் என்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இன மக்களை குறிக்கவும், சில நேரங்களில் மொழியாகவும் ஒழுக்க நீதிக்குரியதாகவும் ஆன்மீக அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த அடையாளம் பெரும்பாலும் பிறப்பால் வருவது. முதலில் இரு பிறப்பாளர்களே ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டாலும் பின்னர் நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களும் ஆரியர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். எனினும், ஆரியர் என்ற அடைமொழிக்குள் சூத்திரர்களை அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்றுகொள்ளப்படவில்லை. நீதிநூல்கள் ஆரியரல்லாதவர்களை அனார்ய (Anarya) என்று குறிப்பிடுகின்றன. சூத்திரர்களை அனார்ய என்று அழைப்பதன் மூலம் சூத்திரர்கள் ஆரியர் என்னும் வரம்பிற்குள் வரவில்லை என்பதைப் புரிந்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக மனுவின் நீதியைப் பார்க்கலாம் (10.66). ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் ஆரியர் என்பது ஒழுக்க நீதியாகவும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ராமாயணத்தில் கைகேயி ஆரிய பிறப்பாக இருந்தாலும் அவருடைய தீய குணத்தால் ஆரியரல்லாதவராகப் பல இடங்களில் அழைக்கப்படுகிறார். ஆனால் ராமர் அவரை ஆரியர் என்றே அழைக்கிறார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then