தனது வீட்டுக் கதவு இரவு பத்து மணிக்குத் தட்டப்பட்டபோதே அடுத்து என்ன நடக்கும் என்பதை ஹிலாரியஸ் கில்கெஸ் அநேகமாக உணர்ந்திருக்க வேண்டும். ஹிட்லரின் பாதுகாப்புப் படையான எஸ்.எஸ்., ரகசியக் காவல்துறையான கெஸ்டாபோ இரண்டிலிருந்தும் ஆட்கள் சிறு குழுவாகத் திரண்டு வந்திருந்தனர். கில்கெஸ் இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் அவரை ஒருவரும் உயிரோடு பார்க்கவில்லை. ரைன் நதியிலிருந்து அவர் உடல் மீட்டெடுக்கப்பட்டது. இது நடந்தது 20-ஜூன் 1933 அன்று. ஜெர்மனியின் சான்சிலராக ஹிட்லர் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள்தான் ஆகியிருந்தன. இவரால் கொல்லப்பட்ட சிலரில் கில்கெஸும் ஒருவர்.
கில்கெஸ் கைது செய்யப்பட்ட இரவை அவரது மகள் பிரான்சிஸ்காவால் மறக்க முடியவில்லை. “என் கண் முன்னால் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். அப்பாவை நான் பார்ப்பது அதுவே கடைசிமுறை என்பதை என்னால் உணர முடிந்தது. அதேபோல் ரைன் நதிக்கரையில்தான் அப்பாவை அதன்பின் நாங்கள் கண்டோம்” என்கிறார் பிரான்சிஸ்கா. கில்கெஸ் 37 முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தார். தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தது. ஹிட்லரின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிவிக்கும் அமைதி சாட்சியாக அவருடைய கறுத்த உடல் இருந்திருக்கிறது.
கில்கெஸ், டசல்டார்ஃப் பகுதியில் பிறந்தவர். அவர் கொல்லப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பு, அதாவது 1932இல் ஹிட்லர் டசல்டார்ஃப் வந்து இரண்டரை மணி நேர உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். டசல்டார்ஃப் ஜெர்மானியத் தொழில் நகரங்களின் இதயம். ‘தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ எனும் விநோதப் பெயர் கொண்ட நாஜிக் கட்சியை அங்கிருந்த செல்வந்தர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் ஆதரவைப் பெறுவதே ஹிட்லரின் நோக்கம். ஹிட்லருக்கும் சோஷலிசத்துக்கும்; ஹிட்லருக்கும் தொழிலாளர்களுக்கும் எள்முனையின் நிழல் அளவுக்கும் தொடர்பில்லை என்றாலும், ‘சோஷலிசம்’, ‘தொழிலாளர்’ ஆகிய இரு அபாயகரமான பெயர்களைக் கொண்டிருந்த அவர் கட்சியைவிட்டுத் தொழிலதிபர்கள் இயன்றவரை தள்ளியே இருந்தனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then