மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
கடம்பனுக்குத் தன் தலைக்கு மேல் ஆயிரம் பேர் சாதியின் பேரால் மதத்தின் பேரால் பணத்தின் பேரால் பதவியின் பேரால் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லை...