பாத்திர வர்ணனையும் சித்தரிப்பும்
ஒரு பாத்திரம் இப்படிப்பட்டதென்று படைப்பாளி வர்ணிக்கலாம். அதை வைத்து அந்தப் பாத்திரத்தின் சித்திரம் உருப்பெற்றுவிடுவதில்லை. குறிப்பிட்ட சில தருணங்களில் அந்தப் பாத்திரம் எப்படி வினையாற்றுகிறது அல்லது எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தே அந்தச் சித்திரம் உருப்பெறுகிறது.
ராமாயணத்தில், ஆட்சியின் மீதான உரிமையைப் பறிகொடுத்ததுடன் காட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் ராமன் ஆளானதில் லட்சுமணன் சீற்றம் கொள்கிறான். கதைப்படி லட்சுமணன் சராசரி மனிதன். இயல்பான ஆசாபாசங்களும் கோபதாபங்களும் கொண்டவன். ஆனால் ராமன் அப்படி அல்ல. அவனை ஆதரிச மனிதனாகவே வால்மீகி சித்தரிக்கிறார். எனவே லட்சுமணனுக்கு வரும் கோபம் அவனுக்கு வர வாய்ப்பில்லை. தாய், தந்தை, சித்தி என அனைவர் மீதும் அபரிமிதமான மரியாதை கொண்டவன் ராமன். எனவே கைகேயியின் பேச்சைக் கேட்டுத் தசரதன் எடுத்த முடிவில் அவனுக்கு வருத்தமோ கோபமோ இல்லை. தன்னுடைய நெருக்கடிக்கு மனிதர்கள் மீது பழிபோடவோ அவர்களுக்கு எதிராக வினையாற்றவோ அவன் விரும்பவில்லை. நதியில் நன்னீர் இல்லாது போவதற்கான பழியை நதியின் மீது போட முடியாது என்கிறான். ஏதோ ஒரு காரணத்திற்காக விதி செய்யும் இச்செய்கையில் நாம் அனைவரும் வெறும் பாத்திரங்கள் என்று சொல்லும் ராமன் இந்த நிகழ்வுகளுக்காகத் தனி நபர்கள் மீது கோபம் கொள்வதில் பொருள் இல்லை என்கிறான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then