பதுக்கப்பட்ட மனக்குகைகளில் திரளும் வண்ணங்கள் பேசும் வாழ்வியல் மொழி

- சரவணன் | தொகுப்பு: முனைவர்.பெ.அருணகிரி

நிலவியல் ஓவியங்கள், உருவ ஓவியங்கள், உயிரற்ற பொருட்கள் சார்ந்த ஓவியங்கள், எதார்த்த ஓவியங்கள் கனவு மற்றும் மாயம் சார்ந்த ஓவியங்கள் எனப் பல வகைமைகளில், காலம் காலமாக ஓவியங்கள் படைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் மனத்தின் இருத்தலைப் பற்றியும் அதன் சிக்கலைப் பற்றியும் உளவியல் சார்ந்து ஓவியர்கள் தங்கள் படைப்புகளில் பங்களிப்பு செய்வது என்பது மிக அரிதாக உள்ளது. குறிப்பாக மேலை நாடுகளில், வாழும் நாள்வரை மனநெருக்கடிகளில் இயங்கிய டச்சு நாட்டு ஓவியரான ‘வான் கோக்’ (Van Gogh), தனது ஓவியங்களில் அடிமன வெளிப்பாட்டியத்தைக் கொணர்ந்த மெக்சிக்கன் ஓவியர் ‘ஃப்ரிடா காலோ’ (Frida Kahlo), மனத்தின் இறுக்கங்களைப் படிமங்களாக்கிய பிரெஞ்சு ஓவியன் ‘பால் காகின்’ (Paul Gauguin), தன் தாய்தேசமான சுவிஸ் நாட்டுக்கான குடியுரிமைகோரி ஜெர்மனியிலேயே மடிந்த ‘பால் க்ளீ’ (Paul Klee) ஆகியோர் மனத்தின் இருத்தலியலைப் பேசுவதில் பங்காற்றியுள்ளனர். இந்திய அளவில், ஹங்கேரியன் – இந்தியன் ஓவியரான அமிர்தா ஷெர்கில் (Amirta Sher Gil) மனம் சார்ந்த ஓவியங்களைப் படைத்துள்ளதாக அறியமுடிகிறது. மேலும் இந்திய மற்றும் தமிழக ஓவியப்பரப்பில் மனத்தின் இயங்கியல் சம்பந்தப்பட்ட ஓவியப்படைப்புகள் என்பது குறைவான அளவிலே நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் மனத்தையே மையமாக நுணுகி ஆராய்ந்து, ஓவியப் படைப்பை அணுகுவதை இக்கட்டுரை வெளிப்படுத்த முனைகிறது. அந்த வகையில் பார்க்கும்போது மனத்தின் இருப்பை, இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, மனித மனங்களையும் அந்த மனம் சுற்றித் திரியும் புறங்களையும் அம்மனதில் ஊடுபாயும் உள்ளுணர்வுகளையும் தனது ஓவியங்களில் மிக நுட்பமாக வெளிப்படுத்துவதில் தனித்துவம் பெற்று விளங்குகிறார் ஓவியர் சரவணன்.

மனம் என்பது எண்ணற்ற அறைகளைக்கொண்டது. அது ஒருக்களித்த கதவுபோல் மெல்ல மெல்ல திறப்பதும் பிறகு இறுக்கமாகப் பூட்டிக்கொள்வதும் சாவியினைத் தொலைத்துவிட்டுத் தேடுவதும், பிறகு பூட்டியும் திறந்தும் விளையாடுவதுமாகத் தனது ஓவியக் கட்டுமானத்தைக் கேன்வாசிற்குள் (கித்தான்- வரைதிரை) மிக அர்த்தமாக, ஆழமாகப் பதிவு செய்து தனக்குள்ளும் பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரு சுய உரையாடலை நிகழச் செய்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!