சுந்தர் சருக்கை எழுதிய ‘Following a Prayer’ நாவலானது கடவுள், பிரார்த்தனை என்று தொடங்கி அவற்றின் மீதாக எழும் கேள்விகளைப் பின்தொடரும் அனுபவத்தை விவரிக்கிறது; அதுவும் மூன்று பள்ளி மாணவிகளின் அனுபவமாக விவரிக்கிறது. பேரமைதி, ஒலி, மொழி, குரல், இசை ஆகியவை குறித்த தேடலாகிறது இந்த நாவல். மிகச் சாதாரண கேள்விகளிலிருந்து தொடங்குகிறது நாவல்: கடவுள் குறித்த நம்முடைய பிரார்த்தனைகள் கடவுளைச் சென்றடைகின்றனவா? மொழி மெய்யானதா, பொய்யானதா? கடவுள் இருக்கிறார் என்றால் எங்கு இருக்கிறார்? அவர் ஏன் நம் பிரார்த்தனைகளுக்கு எதிர்வினையாற்றுவதில்லை? விநாயகரைத் தேடிச் செல்வது என்பது விநாயகக் கடவுளைத் தேடிச் செல்வதாக இருக்கிறதா அல்லது விநாயகர் என்ற சொல்லின் ஒலியைத் தேடிச் செல்வதாக இருக்கிறதா? நம்முடைய பிரார்த்தனை ஒலிகள் எங்கு போகின்றன? யாரைச் சென்றடைகின்றன? இப்படியான கேள்விகள் கல்பனாவின் இருத்தலியல் சிக்கலாக மாறுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு கல்பனாவும், அவளுடைய தங்கை தீக்ஷாவும், தீக்ஷாவின் வகுப்புத் தோழியான குமாரியும், நாட்டார் இசைக் கலைஞரான கங்கம்மாவும் விடைதேட முயல்கிறார்கள். இந்தத் தேடல் குடும்பத்திலிருந்து தொடங்கி கிராமத்துக்கும்; கிராமத்திலிருந்து அதன் எல்லைக்கும்; கிராமத்தின் எல்லையிலிருந்து காட்டுக்கும் பயணிக்கிறது. கடவுள் குறித்த தேடலாகத் தொடங்கும் இந்த நாவல், ஒலி குறித்த அறிவறிதல் பிரச்சினையாக மாறுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then