கடன் அல்லது ஒரு சிறிய விடுமுறை

எல்.ஜே.வயலட்

காதல் என்பது ஒருவரை உலகத்திடமிருந்து இன்னொருவர் சற்று நேரத்திற்கு கடன் வாங்கிக் கொள்வதுதான் என்ற எண்ணம் அவளுக்கு எப்படியோ தோன்றிவிட்டிருந்தது. அவளுக்கு உடனே பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. வெறுமனே மன்னிப்புக் கேட்டால் கூடப் போதும். சாரி, சாரி என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஏன் எதற்கு என்று கேட்காமல் யாரோ ஒருவர் ம்ம் ம்ம்ம் என்று மன்னித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்காகவென்றேதானே கடவுளின் புதல்வன் ஆங்காங்கே சிலுவையில் தொங்குகிறார். அவ்வப்போது ஏன் எதற்கு என்று கேட்காமல் மன்னிக்கப்படுவது தேவையாகவே இருக்கிறது. ஆனால் கடன் தவறு என்று தேவகுமாரன் சொல்லியிருக்கிறாரா என்ன? வட்டி தவறு என்று வேண்டுமானால் இறைத்தூதர் சொல்லியிருக்கிறார்.

அவள் வேகவேகமாக மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நடந்துகொண்டிருக்கிறாள். சாலைக்கு மேலிருக்கும் நடைபாதையில் அவள் மேல் நேராக வெய்யில் அடிக்கிறது. அவளது மஞ்சள் மேலாடை அவ்வளவு வெயிலில் லேசாகப் பொலிவிழந்தது போலிருக்கிறது. சடசடவென உள்ளே நுழைய முயலும் அவளை செக்யூரிட்டி தடுத்து நிறுத்திப் பின்னால் கைகாட்டுகிறார். அங்கே ஒரு சிறிய இயந்திரத்தின் முன் நாலைந்து பேர் வரிசையாக நிற்கிறார்கள். கொரோனா காலப் புதுவரவுகளில் அதுவும் ஒன்று. அதன் முன் கையை நீட்டினால் நம் உடல் வெப்ப அளவை அளந்து நாம் மெட்ரோவில் பயணிக்கத் தகுதியானவர்கள்தானா என்று சொல்லும். அதற்கேற்பப் பச்சை விளக்கோ சிவப்பு விளக்கோ எரியும். அவள் முறை வந்து அதன்முன் கையைக் காட்ட அது அவளைக் கண்டுகொள்வதாக இல்லை, நம்மை அடையாளம் காணமறுக்கும் பழைய தோழியின் முன் கையை ஆட்டுவதுபோல அவள் அந்த இயந்திரத்தைத் தன்னை அடையாளம் காணவைக்கக் கஷ்டப்படுகிறாள். அவளுக்குப் பின்னால் நின்ற இளைஞன் எக்ஸ்கியூஸ் மீ என்று முயல்கிறான். அவனை அந்த இயந்திரம் பட்டென அடையாளம் கண்டுகொண்டு அனுமதி வழங்குகிறது. நல்லவேளை அடுத்து அவள் முயன்றபோது நீயா என்றபடி போ போ எனப் பச்சை விளக்கு எரிந்தது.

வேகவேகமாக இறங்கிச் சென்றும் அந்தப் பெண்ணால் இரயிலைப் பிடிக்க முடியவில்லை. உள்ளே நுழையும்போது கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கையில் வைத்துக்கொள்ள மறந்திருந்தாள். ஸ்கேனருக்குள் தண்ணீர் பாட்டிலை அனுப்பி செக்யூரிட்டிகளிடம் திட்டுவாங்கிச் சில நொடிகளை வீணடிக்காமல் இருந்திருந்தால் அவள் இரயிலைப் பிடித்திருக்க முடியும். சத்தமிட்டபடியே கதவுகள் மூடியபோது அவள் கடக்க இன்னும் ஆறு படிகள் மிச்சமிருந்தன. அவளது செருப்பின் ஹீல்ஸ் கட்டைகள் எழுப்பிய ஒலியால் இரயிலுக்குள்ளிருந்த சிலர் அவளைத் திரும்பிப் பார்த்தது போலிருந்தது. அலுவலக நேரம் கடந்துவிட்டிருந்த அந்த மதியத்தில் மெட்ரோ நிலையத்தில் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. சோர்ந்து ஒரு இருக்கையில் அமர்ந்து, பின் சட்டெனப் பதறி எழுந்து தன் வெள்ளை குர்தா அழுக்காகிறதா என்று பார்த்து மறுபடி கொஞ்சம் கூடுதலாகவே சோர்ந்து அமர்கிறாள். பையிலிருந்து போனை எடுக்க முயலும்போதுதான் படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கி வந்துகொண்டிருந்த அந்த மஞ்சள் சட்டைப் பெண்ணைக் கவனித்தாள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!