எழுத்தாளர் இமையம் எழுதியுள்ள நாவல் ‘எங் கதெ’. ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதியதனூடாகத் தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் இமையம். இவரது பிற நாவல்களான ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’, ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ ஆகியவையும் வெவ்வேறு வகைமைகளில் எழுதப்பட்டவை. சமூகத்தில் புரையோடிப்போன சாதியம் இவரது நாவல்களில் உள்திரையாக அசைந்துகொண்டிருக்கும். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலும் அரசியலும்தான் இவரது நாவல்கள். கடலூரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் இமையத்தின் புனைவுநிலம்; அம்மக்களின் இயல்பான மொழிதான் இவரது புனைவுமொழி. பெரும்பாலும் உள்ளொடுங்கிய கிராமத்து மக்களே இவரது கதை மாந்தர்கள். ‘எங் கதெ’ இவரது பிற நாவல்களிலிருந்து தனித்துவமானது. தனது புனைவு பிம்பத்தைத் தானே அழித்துக்கொள்ளும் செயல்பாடாகவும் இந்நாவலைக் கருதலாம்.
‘எங் கதெ’ ஒரு நீள்கதை. நாவலுக்குரிய பெரும் கதைப்பரப்பு இதில் இல்லை. வெவ்வேறு கதாபாத்திர மோதல்கள் இல்லை. கமலா, விநாயகம் என்ற இரு கதாபாத்திரங்களின் கதைதான் இப்புனைவில் விவரிக்கப்படுகிறது. பிற கதாபாத்திரங்கள் அனைத்தும் இக்கதை மாந்தர்களுக்கு இடையில் பெரிய இடையீட்டை நிகழ்த்தவில்லை. இவர்களிருவரும் சார்ந்த குடும்ப உறுப்பினர்களாகவே அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்நாவலை ஒரு தன்னிலை விளக்க நாவல் என்றும் கூறலாம். விநாயகம்தான் தன் கதையை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறான். இதில் அவனுடைய பார்வை மட்டுமே விரிவாக அலசப்பட்டுள்ளது. கமலா மிகக் குறைவாகவே பேசுகிறாள்.
அதுவும் விநாயகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுடன் நிறுத்திக்கொள்கிறாள். அதிகம் பேசாத அவளது குணம்தான் நாவல் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. விநாயகம் அதிகம் பேசுவதற்கும் இத்தன்மையே காரணமாகச் சொல்லப்படுகிறது. விநாயகம் – கமலா இருவரையும் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் சமூகம் இந்நாவலில் கண்டுகொள்ளப்படவில்லை. விநாயகம் என்ற தனிநபரின் அனுபவத் தொகுப்புதான் கதையாகச் சொல்லப்படுகிறது. அதாவது, நாவல் தன்னிலையில் ஆரம்பித்துத் தன்னிலையில் சுருங்கிப் போகிறது. எனவே, இந்நாவலை ஒரு சிறுகதையின் நீண்ட வடிவமாகக் கருதலாம்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then