6
பௌத்தத்தின் இறுதி இலக்கு நிர்வாணம். நிர்வாணம் என்பது வேறொன்றுமில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கை. துன்பங்களின் முடிவு. துன்பம், துன்ப காரணம், துன்ப நீக்கம், துன்பம் நீக்க வழிகள் என நான்கு உண்மைகளைச் சரியாக உணர்ந்தால் நமக்குக் கிட்டும் மகிழ்ச்சிதான் நிர்வாணம். மானுட வாழ்க்கை துன்பங்களால் ஆனது என்பதை அறிந்து அதற்கான மருந்தைக் கண்டுபிடித்தவர் புத்தர். அதை அருந்தியவர்கள் துன்பமற்றவர்களாக இவ்வாழ்வை அணுகுகிறார்கள். அந்த மாமருந்தே எண் வழிப்பாதை. எம்.ஸ்காட் என்னும் அமெரிக்க உளவியலாளர், இந்த வழியைச் சிறந்தவைகளிலெல்லாம் சிறந்தது என்கிறார்.
தான் பேருண்மையைக் கண்ட பிறகு புத்தர் மான் வனத்தில் தம்மச் சக்கரத்தைச் சுழற்றும் உரையில் கூறியது மிக முக்கியமானது. அவ்வுரையில் புத்தர் இரண்டு எதிர்மைகளைக் குறித்துக் கூறுகிறார். ஒன்று, தீவிரமான புலனின்பங்களில் ஆழ்ந்து கிடப்பது. இது மிகவும் கீழானது என்கிறார். அது எப்போதும் மனித ஆற்றலைச் சீரழிப்பது; அவமானத்தை அள்ளித் தரக்கூடியது; அறிவை அகற்றும் ஆபத்து நிறைந்தது; எந்தப் பலனையும் தராதது; யாரையும் வீழ்த்தக் கூடியது. இதற்கு நேர்மாறான இன்னொன்று, தீவிரமாக விரதம் இருந்து உடலை வருத்தி நோன்புகளை மேற்கொள்வது. இதனால் உடல் சோர்வும் மனச்சோர்வும்தான் ஏற்படும்; வேறொன்றும் நேராது; இது மிகவும் துன்பகரமானது; நாம் எண்ணும் எந்தப் பலனையும் தராதது. இந்த இரண்டையும் விட்டுவிட்டு இரண்டுமல்லாத ‘நடுவழிப் பாதை’யைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் புத்தர். நடுநிலைப் பாதை நல்லறிவை நாளும் தரும். உடல் வன்மையைத் தரும். மெய்யறிவைத் தேடுகிற ஆற்றலைத் தரும். அவை ’உன்னத எட்டு அங்கப் பாதை’ என்று அழைக்கப்படுகின்றன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then