எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது… காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்… தலைகள் துண்டிக்காத கதைகளை முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்… இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு உடல்களும்...
வாரியணைத்து நிலம் பரப்பும் இறகொடிந்து விழும் தசைஇருள் இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை. தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல். விறகொன்று தகித்த அடுப்பு...
சொன்னபடி கேக்கலைன்னா ஒன்னைய அலாக்கத் தூக்கி ஊசியில ஒக்கார வச்சுருவேன் கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள். பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு...