ஓவியம் உங்களோடு உரையாட வேண்டும் – பெனித்தா பெர்சியல்

பிறப்பும் கல்வியும்

ஐம்பூதங்களில் தீயின் திருத்தலமாக இந்து மதத்தினர் நம்பும் திருவண்ணாமலையில் முழுக்க முழுக்கக் கிருத்துவப் பின்னணியில் பிறந்தேன். இருப்பினும் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றிச் சுதந்திரமாகவே வளர்க்கப்பட்டேன். டேனிஷ் மிஷன் பள்ளியில்தான் படித்தேன். ஆர்க்காடு பகுதிகளில் ஊழியம் செய்த லூத்தரன் சபையின் பள்ளி அது. என் பாட்டி, அப்பா கூட அங்குதான் படித்தார்கள். 10ஆம் வகுப்பு முடித்தவுடன் சென்னை ஓவியக் கல்லூரியில் விண்ணப்பித்தேன், இடம் கிடைக்கவில்லை. பிறகு 12ஆம் வகுப்பு முடித்ததும் விண்ணப்பித்தேன். மாற்று ஏற்பாடாகத் திருவண்ணாமலையில் ஆங்கில இலக்கியப் படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தேன். இம்முறை ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

ஓவியக் கருத்தாக்கம்

அது இயல்பாகவே இருந்ததென்று நினைக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள ஆட்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் ஓவியர்கள். அது கூட காரணமாக இருக்கலாம்.

கல்லூரி வாழ்க்கை…

ஊரில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்ததால், சென்னையில் உறவினர் வீடுகளில் தங்கி, கல்லூரி செல்வதென்பது இறுக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், கல்லூரிக்குள் அவ்வுணர்வு இல்லை. விரும்பிய படிப்பு என்பதால் உற்சாகமாகவே இருந்தேன். நான் சேர்ந்த ஆண்டுதான் அச்சிடுதல் (print making) படிப்பைப் முதலாமாண்டு ஆயத்தப் படிப்பில் (preparatory course) புதிதாகச் சேர்த்திருந்தார்கள். இன்றைய புகைப்படக் கலையின் தொடக்க வடிவம் அது. ஓராண்டு முடிந்ததும், நாம் ஓவியம்தானே படிக்க விரும்பினோம், பிறகேன் அச்சிடுதல் படிக்க வேண்டுமென்று மீண்டும் ஓவியத்தில் சேர்ந்தேன். ஆனால், அச்சிடுதல் பயின்றதன் காரணமாக என்னால் ஓவியத்தை இரட்டைப் பரிமாணத்தில் அணுகவே முடியவில்லை. என் ஓவியத்திற்கு அது மிகவும் உதவியாகவும் இருந்தது. மேலும், ஓவியங்களில் water color, poster color போன்ற சில வகைமைகளிலேயே வரைந்துகொண்டிருந்தேன். என்னுள்ளார்ந்த தேடலுக்கான கருவியாகவும் அவை அமைந்தன.

தொடக்கத்திலிருந்தே நிலைப்பட ஓவியங்கள் (still life) மீது ஆர்வமிருந்தது. அதைக் கற்றுக்கொண்ட பிறகே ஓவியப் பரப்பு, ஒளி, பொருள்களின் தரம் ஆகியவை குறித்துத் தெரிந்துகொண்டேன். என்னுடைய ஆசிரியராக still life இருந்ததென்று சொல்லலாம்.  அகரீதியான மாற்றம் கல்லூரி முடிந்ததும் மீண்டும் வெறுமை சூழ்ந்தது. ஊரைவிட்டுச் சென்னை வந்தபோது இருந்த அதே இறுக்கம். கல்லூரி வாழ்க்கை என்னை வெகுவாகப் பாதித்தது. அப்போதுதான் ஓவியராவதென முடிவெடுத்தேன். படிக்கும் வரையில் அடுத்தது என்ன என்பது பற்றி யோசித்ததில்லை. ஓவியம்தான் வாழ்க்கையெனத் தீர்மானித்த பிறகு எனக்கான வெளியைத் தேடினேன். அது லலித் கலா அகாதமியில் கிடைத்தது. கல்லூரியைப் போலவே இங்கும் ஓவியம், சிற்பம், மட்பாண்டம் எனத் தனித்தனித் துறைகள் இருந்தன. பெரும்பாலான நேரத்தை இங்கே செலவழித்தேன். அதேநேரம் உறவினர் வீடுகள் அல்லாமல் தேவாலயத்தின் பெண்கள் விடுதியில் தங்கிக்கொண்டேன். அகாதமிக்கு வரும் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தேன். ஒருகட்டத்தில் அதையும் விட்டுவிட்டேன்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger