ஒருவரின் மரணத்திற்குப் போக வேண்டுமா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றுவது எவ்வாறு எனத் தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறேன். அவர் நெருங்கிய நண்பர் என்றாலும், சொந்தப் பந்தமாக இருந்தாலும் அதனின் அளவுகோல் யாரிடம் இருக்கிறது? மரணித்த நபரின் மீது காட்டப்படும் பரிவா… அல்லது அதுவரை அவர் செய்திருந்த செயல்கள் அடிப்படையிலா என்று மனதிற்குள் எண்ணற்ற விதங்களில் உழன்றுகொண்டிருக்கிறேன். ஒருவிதத்தில் இதுவெல்லாம் தேவையில்லாத சிந்தனைகளே. அனைத்திற்குமான முடிவு நம் கையில் என்று கூறிவிடலாம் மேம்போக்காக. நான்கு பேருக்காக அல்லது இச்சமூகப் பார்வையிலிருந்து தப்பிக்கத் தலையைக் காட்டிவிடுவது இயல்பே. ஆனால், அந்நிலைக்கு மனதைக் கொண்டு வந்து நிறுத்துவதற்குள் அவருடனான உறவை நினைத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அதுபற்றி யோசிக்கக் கூடாது என்று எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்தாலும் மனதோ சம்மந்தப்பட்ட நபரின் இருப்பை நிறுவிக்கொண்டே இருக்கிறது.
இது ஒவ்வோர் இறப்பின்போதும் சீண்டிக்கொண்டே இருக்கிறது. இதன் ஆரம்பப் புள்ளியாய் இருந்தது மாமாவின் இறப்பே. எனது பதின் பருவத்தில் அவரின் மரணம் நிகழ்ந்தேறியது. வீட்டிலிருந்து அனைவரும் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர். என்னால் அவர்களுடன் ஒன்றி கலந்திட முடியவில்லை. வேக வேகமாகக் கிளம்பும் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். இவர்களால் எப்படி இப்படிக் கிளம்ப முடிகிறது என்கிற கேள்வியிலிருந்து தொற்றிக்கொண்ட விஷயம், இன்றுவரை என்னை வெவ்வேறு விதங்களில் ஆட்படுத்துகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then