ஊர் திரும்புதல் ஆட்களில்லாத ஒழுங்கையில் நின்று யாரோடு கதைக்கிறாய்? யாருமில்லாத வீடொன்றின் கதவை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறாய்? கயிறு இழுத்துக் கட்டப்பட்ட படலைகளை உலுப்பித் தள்ளி களைத்துப் போனாய்....
புத்தகத் திருடன் என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம் அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும் நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது புதிய இடத்தில் எதையும்...
குகையிருள் ஒளியில் நர்த்தனமாடும் தேவதையைக் கண்டேன். கடலலைகளில் குதித்துச் சென்ற மீன்களாய் கனாக்களின் உருவமாய் நினைவின் ஓவியமாய் கணங்களில் மறைந்தவளை வெகுதூரம் தேடித் திரிந்தலைந்தேன். துடித்த கண்ணிகளினூடே...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
பார்த்துப் பார்த்து இந்நாளிலா என்னைக் காண வருகிறாய் சித்தார்த்தா! நல்லதுதான் நல்ல நாள்தான் நான் அந்த மறைவிடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறேன் எவ்விடத்தில் உன்னைப் பிரிகிறேனோ அவ்விடத்தில் உன்னை மறுபடியும்...
தூரிகைக் கலைஞனே அம்மாவின் புகைப்படம் அனுப்புகிறேன். மங்கிவிட்டது தெளிவாக்க வேண்டும். பூஞ்சையேறிய காலத்தின் களிம்பைக் களைய வேண்டும் அம்மாவின் கலைந்த கூந்தலைச் சீவி முடிக்க வேண்டும். சிவப்புக்...