மீசவச்ச ஆம்பள யாருடா வெளியே வாடான்னு ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள் எத்தனை நாளைக்குத்தான் ஆமை போல் அடங்கி நத்தை போல் சுருங்கி பத்துக்குப் பத்துக் கடைக்குள்ளே வாழ்வது...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
நாமேன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குடியாயிருக்கோம் அதுவா ஒரு ஊருக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும் மகனே. வெத்து மயிருகள் மூடப்பட்ட சலூனில் வெட்டுவாங்கிய மயிர்களனைத்தும் மாநாடு...