ஓவியர்கள் நூற்றாண்டுளாகத் தனித்துவமானவர்களாகவும் தங்களுக்கென தனியானதொரு அகவுலகையும் உணர்ச்சிகளையும் கொண்டவர்கள். பல வண்ணங்கள் கொட்டிக் கிடக்கும் இப்பிரபஞ்சவெளியைத் தன் பிரதிபிம்பமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஓர் ஓவியனின் தனிமையும், கையறுப்பட்ட நிலையும், வாழ்விற்கு என்னதான் அர்த்தமிருக்கிறது என்று புரியாத வெறுமையும் உள்ள நிலையில் அவன் வண்ணங்களை இரவின் மடியில் அவற்றைத் தேடித்திரிந்து அலைகின்றான்.
அந்தப் பிரபஞ்சத் துகள்களின் ஒன்று ஓவியர் வெங்கடேசன். அந்தத் துகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகள். அதன் இடையில் உறைந்திருக்கும் வெற்றிடம். சாரமற்ற அந்த வெற்றிடத்தில் உழன்று கொண்டிருக்கும் அவர் வடச்சென்னையில் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். வடச்சென்னையிலுள்ள நெற்குன்றத்தில் தற்போது வசித்து வருகிறார். அவர் 1989-94 ஆம் ஆண்டுகளில் சென்னைக் கலைக் கல்லூரியில் இளங்கலையும் (பி.எப்.ஏ), அதனைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் குல்பர்காவில்லுள்ள எம்.கே கலைக்கல்லூரியில் முதுகலையும் (எம்.எப்.ஏ) படித்து (எம்.எப்.ஏ) முடித்தார்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then