பீஃப் வணிகச் சாலை

கௌஷல் ஷெராஃப் | தமிழில்: கீகீ

முதல் தகவல் அறிக்கை உண்மையெனில், மார்ச் 10, 2022 அன்று அதிகாலை 3:30 மணிக்கு லோனாவாலா ஊரகக் காவல்நிலையத் தொலைபேசிக்கு ஆளறியா அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பாளர் மாட்டிறைச்சி ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று அந்தக் காவல்நிலையக் கண்காணிப்பு பகுதியான பூனே-மும்பை அதிவேக நெடுஞ்சாலை வழியாக, மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சுற்றிச் செல்லும் பாதையைக் கடந்து செல்லும் என்று தெரிவித்தார். அது ஒரு முக்கியமான துப்பாக விளங்கியது. பாரதிய ஜனதா கட்சி 2015ஆம் ஆண்டு அமல்படுத்திய விலங்கு பாதுகாப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருப்பதற்கான தண்டனை, குறைந்த அளவு ஹெராயின், கோகெய்ன் அல்லது மோர்பின் வைத்திருப்பதற்கான தண்டனையை விட அதிகமாகியது.

போலீஸார் விரைந்து முடிவெடுக்க, உதவி துணை ஆய்வாளர் குதுபுத்தீன் குலாப் கான், சின்ஹத் கல்லூரி அருகே கண்காணிப்பில் இருந்தார். அங்கு நெடுஞ்சாலை, மலைவாசஸ்தலத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு பெரிய வளைவை எடுக்கிறது. அந்த மாலை, NL 01 AB 5853 என்ற லாரி அவ்வழி வந்தது – தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த அதே வாகன எண். கான் லாரியை நிறுத்தச் சைகை செய்தார்; ஆனால், அந்த வாகனம் அவர்களைத் தாண்டி விரைந்து சென்றது. அதைத் தொடர்ந்து போலீஸார் அந்த வாகனத்தைத் துரத்திப் பிடிக்க, 35 வயதான டிரைவர் மக்னு அஷ்ரஃபி பஸ்வான், 25 வயதான கிளீனர் சுபம் சர்மா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger