தொகுதி மறுவரையறை:வடக்கு எதிர் தெற்கு கருத்துருவாக்கத்திற்கு அப்பால்…

தமிழில் : மு.இரவிச்சந்திரன்

– பிரதிநிதித்துவ ஜனநாயகம் “ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்ற கோட்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோட்பாடு நடைமுறையில் ஆழமான சமச்சீரற்ற தன்மையை உருவாக்கியிருக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 17, 2026 அன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது,  தொகுதிகளைப் புதிதாக மறுவரையறை செய்வது ஆகியவை தொடர்பாக ஒன்றிய அரசின் முயற்சியை ஆதரித்து உரையாற்றியபோது, “ஞ்.. நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது. …..ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கோட்பாடு மீறப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

1.நாடாளுமன்ற மக்களைவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850-ஆக அதிகரிப்பது; 2.இந்த எண்ணிக்கையை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடு தழுவிய அளவில் மக்களைவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிப்பது; மேலும், 3.மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது ஆகிய யோசனைகளை ஒன்றிய அரசு ஏப்ரல் 2026-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்போதைய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியான பிறகே புதிதாகத் தொகுதிகளை மறுவரையறைச் செய்வது சாத்தியம்; அதன் பிறகே, பெண்களுக்கான இட ஒதுக்கீடை நடைமுறைப்படுத்த முடியும்.

மாநிலங்களுக்கு இடையே மக்களவைத் தொகுதிகளை மறு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக் குறித்துக் குழப்பம் ஏற்பட்டதால், ஒன்றிய அரசால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. 2011 மக்கள்தொகை  கணக்கெடுப்புக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகள் மறுஒதுக்கீடு செய்யப்படும் என இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்படும். அதன் மூலம் 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப தற்போது ஒவ்வொரு மாநிலமும் கொண்டுள்ள தொகுதிகளின் விகிதாச்சாரம், விரிவாக்கப்படும் சபையிலும் பேணப்படும் என்று கூறினர். மசோதாவில் கூறப்பட்டிருப்பதற்கும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விகிதாச்சாரம் குறித்து ஒன்றிய அரசு கொண்டுள்ள உள்ளக்கிடக்கைக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக, இப்பிரச்சினையில் அரசியல்ரீதியான கருத்தொற்றுமை ஏற்படாமல் போனதால், இம்மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனால், அரசின் நோக்கம் மிகத் தெளிவான ஒன்று: 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத் தொகுதிகளைப் புதிதாக மறுவரையறை செய்வது, அதோடு இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்களுக்கான இட ஒதுக்கீடைக் கொண்டுவருவது ஆகியவற்றை நிறைவேற்றிட ஒன்றிய அரசு விரும்பியது. இந்த விருப்பம் 2029-க்கு முன்பே நடக்குமா அல்லது அதற்குப் பிறகா என்பதுதான் விவகாரமேயொழிய, இந்தியாவில் பிரதிநிதித்துவ முறையில் புதிய ஒழுங்கைக் கொண்டுவருவது என்பது நிச்சயமான ஒன்று.

2014-இல் பா.ஜ.க. அடைந்த வெற்றியைப் பல அரசியல் நோக்கர்களும் “புதிய குடியரசின்” தொடக்கமாகக்  கூறியதோடு, அவ்வெற்றி தேசிய அரசு குறித்த புதிய கோட்பாடுகள் உருவாகப் போவதன் அடையாளம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஏற்கெனவே இருந்து வரும் கோட்பாடுகளை அடிப்படையிலேயே மாற்றி அமைப்பதன் மூலம், ஒரு புதிய அரசியல் செயல்பாடின் தொடக்கமாகவும், அதேவேளையில் ஏற்கெனவே இருந்து வரும் செயல்முறையின் முடிவாகவும் 2014 அமைந்தது இந்தியா தனது தோற்றம் மற்றும் அதனின் ஒழுங்கமைப்புக் கோட்பாடுகள் குறித்த மறுவிசாரணையில் இருந்துவரும் வேளையில், மென்மேலும் மையப்படுத்தப்பட்ட அரசாங்க அமைப்பு மற்றும் தேசம், தேசியம் குறித்து மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத கடுங்கோட்பாட்டுவாதம் ஆகியவற்றை நோக்கி நாட்டைத் தள்ளிச் செல்லமுனைகிறது, பா.ஜ.க. இதனை வற்புறுத்தி இணங்க வைப்பது, கருத்து மோதல், மிரட்டுவது ஆகியவற்றின் மூலம் சாதிக்கப் பார்க்கிறது. 1973-க்குப் பின் முதன் முறையாக, இந்தியக் குடியரசின் பயணப் பாதையில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பும், மாநிலங்களுக்கு இடையே நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவிநியோகம் செய்யும் உடனடி சாத்தியப்பாடும் மிக அதிகமான தாக்கத்தைச் செலுத்தக்கூடிய மைல்கற்களாக இருக்கலாம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின்படி இந்தியாவில் 96.88 கோடி பதிவு பெற்ற வாக்காளர்கள் இருந்தனர். மிகக்  கச்சிதமான கணித விதிகளின்படி இவ்வாக்காளர்கள் அனைவரையும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சரிசமமாகப் பகிர்ந்து, ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தினால், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியும் தோராயமாக 18.04 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டிருக்கும். ஆனால், நடைமுறையில் அவ்வாறில்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய நாடாளுமன்றத் தொகுதியான தெலுங்கானாவிலுள்ள மால்கஜ்கிரி 37.80 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது. உ.பி., காஜியாபாத் தொகுதியில் 29.48 இலட்சம் வாக்காளர்களும், உ.பி., கௌதம் புத்தா நகர் தொகுதியில் 26.81 இலட்சம் வாக்காளர்களும், கர்நாடகா, பெங்களூரு வடக்குத் தொகுதியில் 32.15 இலட்சம் வாக்காளர்களும், மேற்கு டெல்லி தொகுதியில் 25.92 இலட்சம் வாக்காளர்களும் உள்ளனர். மிகச் சிறிய நாடாளுமன்றத் தொகுதியான இலட்சத் தீவில்  58,000 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அதேசமயத்தில் டாமன்-டையூ தொகுதியில் 1.34 இலட்சம் வாக்காளர்களும், லடாக் தொகுதியில் 1.90 இலட்சம் வாக்காளர்களும் உள்ளனர். இலட்சத் தீவுகளை ஒப்பிடும்போது மால்கஜ்கிரியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 65 மடங்கு அதிகமாகும். நாம் மாநிலங்களை ஒப்பிட்டால், கேரளாவில் சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குத் தோராயமாக 13.5 முதல் 13.8 இலட்சமாக உள்ளது. இது தேசிய சராசரியைவிடக் குறைவு. அதேசமயத்தில், உ.பி.யை எடுத்துக்கொண்டால், அங்கு சராசரி வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு தொகுதிக்குத் தோராயமாக 19 இலட்சமாக உள்ளது.

அரசமைப்புச் சட்டம், ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் அளவை மொத்த மக்கள்தொகை அடிப்படையில் வரையறுக்கிறதேயொழிய, வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. ஓரிடத்தின் மக்கள்தொகை வாக்காளர்கள் அல்லாதவர்களையும், இந்தியக் குடிமகன் அல்லாதவர்களையும் சேர்த்தே கொண்டிருக்கும். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம், இந்தியக் குடிமகன்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறக் கூடிய நடவடிக்கை நாடுதழுவிய அளவில் நடைபெறுகிறது. தொகுதி எல்லையும், ஒரு மாநிலத்தின் ஒப்பீட்டுப் பிரதிநிதித்துவமும் மொத்த மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதம் பொதுவாக உள்நாட்டுக்குள் நடந்துவரும் புலப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினரின் புலப்பெயர்வு ஆகியவற்றைச் சுற்றி நடந்துவரும் அரசியலின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்ற பிரதிநிதித்துவ மறுவரையறை குடிமகன்களின் எண்ணிக்கை அடிப்படையில் அன்றி, மக்கள்தொகை அடிப்படையில் அமையக்கூடாது என்ற வாதத்தை ஆதரித்து வருகிறார். இந்தியாவில் நடந்துவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை, ஒருவரின் ஓட்டுரிமையை மட்டுமின்றி, அவர் எந்த இடத்தில் வாக்களிக்கத் தகுதி பெறுகிறார் என்பதையும் தீர்மானிக்கிறது. இந்தியத் தேர்தல் விதிமுறைகள் ஒருவர் எந்த இடத்தில் வசித்து வருகிறாரோ, அந்த இடத்தின் வாக்காளராக அவரை வரையறுக்கிறது. அதாவது, ஒரு தொகுதியில் அந்தத்  தொகுதியைச் சேராத வாக்காளர்கள்கூட வசித்து வருவார்கள். அவர்களுள் இந்தியக் குடிமகன் அல்லாதவர்களும் இருப்பார்கள். இந்தியக் குடிமகனாக இருந்து, வேறு இடத்தில் வாக்குரிமை உள்ளவர்களும் இருப்பார்கள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger