பேரன்பைத் தேடிய பயணத்தில்… க.மதுப்ரியா

ஒளிப்படக் கலைஞர் அறிமுகம்

புகைப்படங்கள் வரலாற்றை உறைய வைப்பவை. நூற்றாண்டுக்கு முந்தைய புகைப்படங்களைக் காணும்போது அக்காலகட்டத்திற்குள் உள்நுழைந்து வியப்புறுகிறோம். அவை சமூகத்தின் எதார்த்தத்தை, குரூரத்தை நமக்கு வெளிச்சமிட்டுக்கொண்டே இருக்கின்றன. பல பக்கங்கள் படித்து அறிந்துகொள்ள வேண்டியதை ஓர் ஒளிப்படம் நமக்குச் சொல்லிவிடுகிறது. ரொஹிங்கியா இஸ்லாமியர்களின் கொடுந்துயரத்தையும் போரின் இழப்பையும் கொரோனா காலத்தில் மக்கள் சந்தித்த வலியையும் இறப்பையும் டேனிஷ் சித்திக்கின் புகைப்படங்கள் நமக்குத் துலக்கமாகக் கூறின. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படம் தமிழ்ச்சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திப் பெரும் போராட்டத்திற்கு அடிகோலியது. ஆக, புகைப்படம் என்பது அதிகாரத்தை எதிர்க்கும் வல்லமை கொண்டது. மனித வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் புகைப்படங்களாய்ச் சேமித்து நினைவுகொள்கிறோம். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற நம்பிக்கை இருந்தது. தற்போது காலமாற்றத்தால் பெற்ற அறிவின் பயனாக, அறிவியலின் வளர்ச்சியால் பலநூறு செல்ஃபிகளை இன்று எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நூறாண்டுகளுக்கும் மேல் வரலாறுடைய புகைப்படக் கலையோடு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர் நவீன்ராஜ் தன்னுடைய தனித்துவமான படைப்புகளால் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். நீடாமங்கலம் அருகேயுள்ள திட்டக்குடியைச் சேர்ந்த இவர், புகைப்படக் கலையின் மீதிருந்த பேரார்வத்தால் மென்பொருள் பொறியாளர் பணியை விடுத்துத் தொழில்முறை புகைப்படக் கலைஞராகவும் பயணப் புகைப்படக் கலைஞராகவும் இருந்துவருகிறார்.

இவருடைய பெற்றோர் கவுதமன் – ராமலக்ஷ்மி. பள்ளிப்பருவத்தில் தன் தந்தையோடு இரவு நேரத்தில் ஆற்றங்கரையோரம் பறக்கும் மின்மினிப் பூச்சியைப் பிடித்துக் கண்ணாடிக் குவளைக்குள் அடைத்து, அந்த ஒளியின் வழியே இயற்கையை வியந்து பார்த்ததும் பெற்றோர்களோடு இணைந்து விவசாயம் செய்த இயற்கை வாழ்வுதான் ஒளிப்படக் கலையின் மேல் ஆர்வத்தைத் தூண்டியது என்று குறிப்பிடுகிறார். தன்னுடைய ஆரம்ப நாள்களை நினைவுகூர்ந்த அவர், சென்னைக்கு வந்து  வேலையில் சேர்ந்த நாள்களில் CWC (Chennai Week end Clickers) எனும் படக்குழு பற்றி தெரியவந்தது, மொபைல் கேமராவில் ஒளிப்படங்கள் எடுக்கத் துவங்கி, பின் மெல்ல மெல்லப் புகைப்படக்கலையின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டுள்ளார். பின்னர், CWC இன் நட்புகளின் உதவியோடும் அவர் பலகாலமாகச் சேர்த்து வைத்த தொகையோடும் DSLR கேமராவை வாங்கியுள்ளார். இவர்  தந்தையின் நண்பரிடம் இருந்த Film Roll கேமராதான் இவர்  முதலில் தொட்டுப் பார்த்ததாகும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!