பண்டிதர் க.அயோத்திதாசர் தமிழையும் சமூகங்களையும் கற்றறிந்தவர். அரசியலில் தொலைநோக்குடையவராகத் திகழ்ந்தவர். சமயத்துறையில் அறிவு சார்ந்த நெறியினர், மக்கள் தங்கள் வாழ்வில் கல்வி, தொழில், விவசாயம், உற்பத்தி, வணிகம் போன்றவற்றில் முன்னேறி அன்பு, அறிவு, ஒழுக்கம், மனிதநேயம், தியாகம் ஆகியவற்றால் சிறந்த மக்களாக வாழ்ந்து, நல்ல தலைவர்களை உருவாக்கி, நல்லாட்சியால் நாட்டை நலம் பெறச் செய்ய வேண்டும் என்று எண்ணியவர்.
1875இலிருந்து 1914வரை அயோத்திதாசருடைய 50 ஆண்டுகளின் சிந்தனைகளே இப்பெருநூலாகும். அவரது சிற்றுரை, பேருரை, தொடர்ப் பேருரை நீங்கலாக – சமுதாயம், சமயம், அரசியல், இலக்கியம், வரலாறு போன்றவற்றோடு, சிறு நூல்கள் முதல் ‘ஆதிவேதம்’ என்ற பெருநூல்வரை அனைத்து எழுத்தோவியங்களும் திரட்டப்பட்டு 1,576 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது.
அயோத்திதாசரின் கல்வியறிவு அவரையும் அவரது சமுதாயத்தையும் வாழ வைத்து, பிறரைச் சிந்திக்கத் தூண்ட, தொண்டாற்ற வைத்தது. அவரது மருத்துவத் தொழில் குடும்பத்தை நடத்த உதவியது. அவர் சிறந்த பேச்சாளராக, அறிவார்ந்த எழுத்தாளராக, பன்னூல் படைப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, சமுதாயத் தொண்டராகப் பணி செய்த பெரியவராவார்.
அவர் 1945இல் சென்னை ஆயிரம் விளக்கு மக்கிமா நகரில் பிறந்து, தேனாம்பேட்டையில் பயின்று, நீலகிரியில் குடியேறி, சென்னை இராயப்பேட்டையில் வாழ்ந்து, 1914இல் வீடுபேறடைந்தவர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then