அவன் கண் முன்னால்தான் அவர்களைத் துன்புறுத்தி தூக்கிலேற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவராய் திசைகள்தோறும் கிளைகள் முளைத்துக்கொண்டேயிருக்கிறது நாளுக்குநாள் அந்தத் தூக்குமரத்தில் பலசாதிப் பறவைகளின் கூரலகால் கொத்துப்பட்ட ஆந்தையொன்று பதற்றத்தோடு மறைந்திருக்கிறது...
ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில் எமது சஞ்சரித்தல் மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும் அவ்வாதி பெரும்புலத்தில் அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன் எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்...
பாட்டுடைத் தலைவியும் மாட்டு வாலும் கெவுளியின் கத்தலில் வேறுபாடு கண்டுணர்ந்த தலைவி அரசமரத்தடியில் முதுகிழத்தியிடம் குறி கேட்கிறாள் சோழி உருட்டிப் பார்த்த கிழத்தி தலைவன் திரும்பும்...