ஓவியர் அறிமுகம் | இளவேனில்
“சிறைப்பட்டிருக்கும் காலத்தை விடுவிக்கும் வண்ணங்கள் எல்லாவற்றுக்கும் முன்னால் நாம் காலத்தையும் வாழ்வையும் காண்கிறோம் அவை பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன படத்தின் இடப்புறம் நோக்கி கரை கரையை சந்திக்கும் இடமது. ஆனால் இந்த சந்திக்குமிடம் காண்பிக்கப்படுவதில்லை அது கித்தானுக்குள் நடைபெறவில்லை. ஏனெனில் கரையின் மறுபுறம் இருப்பவை சொர்க்கமும் நித்தியமும்”
– ஆலன் கின்ஸ்பெர்க்.
செதில் செதிலாக உதிரும் அதிகாரம்
‘எரிந்த சாம்பலிலிருந்து உருப்பெற்ற கித்தான் முழுவதும், கருகிச் சிதைந்த மனித உடல்கள் நிறைந்திருந்தன. புழுத்துப்போன அதிகார குமட்டலாலும் வன்முறையாலும் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை அந்த ஓவியம் அறிவித்தது. கொழுந்துவிட்டு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் சாதிய தீ நாக்குகள் எரித்த இதயங்களும் நரம்புகளும் சாம்பலாகிப் போன எலும்புக் குவியல்களும், முடை நாற்றமடிக்கும் வரலாற்றின் சாட்சிகளாக அந்த சாம்பல் வர்ண ஓவியம் முழுவதிலும் பரவிக்கிடந்தன. ஓவியத்தின் உள்ளடுக்குகளில், காலத்தால் என்றேனும் ஒருநாள் விடுவிக்கப்படவிருக்கும், யார் கண்ணுக்கும் தெரியாத, மானிட இருப்பின் நம்பிக்கை புதைந்திருந்தது’ என்று நடராஜின் வரலாற்றின் மின்மினிப் பூச்சிகள் ஓவியம் குறித்து நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறேன்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then