அனஸ்தீஸியா

கு.ஜெயபிரகாஷ்

“Your pain is the breaking of the shell
that encloses your understanding.”

– Kahlil Gibran

இன்று

ரவு 2:47. ஆய்வகத்தின் மங்கலான நீல ஒளியில், எம்.ஆர்.ஐ ரிப்போர்ட்கள் சிதறிக் கிடக்கும், ஒவ்வொன்றும் ஒருவரின் உடலுக்குள் மறைந்திருக்கும் கதைகளைப் போல. அந்தக் கதைகளின் நடுவில் மேசையின் அருகில் மீரா அரைத் தூக்கத்தில் சாய்ந்திருந்தாள். தலையணையில்லாமல், வலது கையின் மடிப்பில் தலையை வைத்தபடி கிடந்த அவளின் உடல் மட்டும் ஓய்வெடுத்தது; மனம் வழக்கம்போல் விழிப்பாகவே இருந்தது. அவளுக்குக் கனவுகள் வருவதில்லை; வந்தாலும் அவை நினைவில் தங்குவதில்லை. ஒருமுறை படித்த பழைய ஆய்வின் வரி அவளின் நினைவில் மீண்டும் மேலெழுந்தது “வலி இல்லாத மனிதர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் அரிது.” அந்த வரி அவளுக்குள் ஓர் எதிரொலியாகப் பரவியது; “வலிதான் நம்மை விழிப்பாக வைக்கிறது. தூக்கத்திலும் கூட” என்ற எண்ணம் அவளைச் சுற்றிக்கொண்டது.

அந்த அமைதியை உடைத்து, அவசர அழைப்பின் அதிர்வு போன் வழியாக வந்தது “மோட்டார் விபத்து, இடது காலில் எலும்பு முறிவு” என்று போனில் பேசியவர் சொன்னதைக் கேட்டு அவள் மெதுவாக எழுந்தாள். உடல், சோர்வை உணர்ந்தது. ஆனால், அது ஒருபோதும் வலியாக மாறவில்லை. முகத்தில் தெளித்துக்கொண்ட நீரின் குளிர்ச்சிக் கூட உணர்வாக அல்லாமல், வெறும் தகவலாக மட்டுமே அவளுக்குள் பதிந்தது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger