கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. சீன தேசத்தில் ஒரு சின்ன கிராமம். கிராமத்துல ஒரு மடாலயம். மடாலயத்துல ஒரு துறவி. அவர் பெயர் ‘சுவாங் ஷீ’ (Zhuang zi). அன்றைய நாள் இரவில் அவர் தூங்கப் போனார். தூக்கத்தில் ஒரு கனவு. கனவில் ஒரு வண்ணத்துப் பூச்சி. ரொம்பவும் உற்சாகமாக, ஒவ்வொரு மலராகத் தாவித் தாவி பறந்துகொண்டிருந்தது. பின், தேன் அருந்துகிறது. கனவு கண்டிருந்த சுவாங் ஷீ, தன்னை அந்த வண்ணத்துப் பூச்சியாகவே உணர்ந்தார். இரவு முழுக்க வண்ணத்துப் பூச்சியாக, அந்த மலைப் பிரதேசமெங்கும் சுவாங் ஷீ சுற்றி வந்தார்.
காலையில் வழக்கம் போலக் கனவு கலைந்தது; கண் விழித்தார். அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். இரவில் கண்ட கனவு துல்லியமாக ஞாபகம் இருந்தது. கனவில் வண்ணத்துப் பூச்சியாகப் பறந்து திரிந்ததைச் சிலிர்ப்புடன் நினைத்துக்கொண்டார். அப்படியே இருந்தவருக்கு, எப்பொழுது என்று தெரியவில்லை, திடீரென்றுதான் தோன்றியது – ‘இப்ப நான் சுவாங் ஷீயா? வண்ணத்துப் பூச்சியா?’ வண்ணத்துப் பூச்சியான நான், தூக்கத்தில் சுவாங் ஷீ என்று என்னைக் கனவு கண்டுகொண்டிருக்கிறேனா? அல்லது, சுவாங் ஷீயான நான் இரவெல்லாம் வண்ணத்துப் பூச்சியாகக் கனவு கண்டு காலையில் கண் விழித்திருப்பதுதான் உண்மையா? எது நான், எது கனவு? இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல், அதை ஒரு கவிதையாக எழுதி வைத்தார்.
இந்தக் கவிதை இன்றைக்கு வரைக்கும் பலரையும் பைத்தியம் பிடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. தான் வண்ணத்துப் பூச்சியோ என்று சந்தேகம் கொண்ட சுவாங் ஷீயால் அல்லது தானொரு துறவியா என்று குழம்பிப் போன வண்ணத்துப்பூச்சியால் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனக் கவிதை இது.
20ஆம் நூற்றாண்டில் நிறைய பேர் இக்கவிதையைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இதற்கு என்ன விளக்கம்? சுவாங் ஷீயையும் வண்ணத்துப் பூச்சியையும் எப்படி வேறுபடுத்துவது? உண்மையிலேயே அந்தக் கவிதையை எழுதியது வண்ணத்துப் பூச்சியா, அல்லது சுவாங் ஷீயா?

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





