அடையாள வெளிப்பாட்டுச் சுதந்திரம்: பாபாசாகேப் அம்பேத்கரின் பன்மைய சமூகத்திற்கான இலக்கு

தாரகை மோகன்

ந்தியாவில் பால்புதுமையினரின் (LGBTQA+) சட்டப்பூர்வ மற்றும் சமூக அங்கீகாரத்தை நோக்கிய நகர்வுகள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவெளியிலும், அரசியல் தளங்களிலும், நீதித்துறையிலும் முதன்மையான விவாதப் பொருளாகவும் மாற்றத்திற்கான களமாகவும் விளங்கிவருகின்றன. சமூகத்திலும் நாடாளுமன்றத் தளங்களிலும் நிலவும் பல்வேறு பாரம்பரிய, கலாச்சார எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்நகர்வு சார்ந்த சட்டப் போராட்டங்களும் நீதித்துறையின் அணுகுமுறைகளும் இந்தியச் சூழலில் தீர்க்கமானதொரு வரலாற்று மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. முழுமை அடையாததாக இருப்பினும், அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இந்தச் சட்டப் போராட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. இதன் முதன்மையான தொடக்கப்புள்ளியாக, நாஸ் ஃபவுண்டேஷன் தொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுநல வழக்கு (Naz Foundation vs Government of NCT of Delhi, 2009) அமைகிறது. வயது வந்தோரின் சம்மதத்துடன் கூடிய தன்பாலின உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் பிரிட்டிஷ் காலத்து இந்தியத் தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவு, இந்திய அரசியலமைப்பின் சமத்துவம் (பிரிவு 14), பாகுபாடின்மை (பிரிவு 15), சுதந்திரம் (பிரிவு 19), வாழ்வுரிமை-கண்ணியம் (பிரிவு 21) ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று இவ்வமைப்பின் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இவ்வழக்கை விரிவாக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வயது வந்தோருக்கிடையில் பரஸ்பர சம்மதத்துடனான தன்பாலின உறவைக் குற்றமாகப் பாவிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனத் தீர்ப்பளித்து, அப்பிரிவின் குறிப்பிட்ட பகுதியை ரத்து செய்தது. பால்புதுமையினரின் அரசியலமைப்பு உரிமைகளையும் மனித மாண்பையும் இந்திய நீதித்துறை முதன்முறையாகப் பிரகடனப்படுத்திய மிக முக்கியமான தீர்ப்பாக இது அமைந்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட வெற்றி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘சுரேஷ் குமார் கௌஷல் எதிர் நாஸ் ஃபவுண்டேஷன்’ (Suresh Kumar Koushal vs Naz Foundation) வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பைத் தலைகீழாக மாற்றி, பிரிவு 377ஐ மீண்டும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவந்தது உச்ச நீதிமன்றம். இத்தீர்ப்பில், பால்புதுமையினரை ‘மிகச் சிறிய பகுதியினர்’ (minuscule minority) என நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் விவரித்ததோடு, தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறும் இவர்களின் மக்கள் தொகை மிகக் குறைவு என்றும், இப்பிரிவை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த முடிவை சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கே விட்டுவிடுவதாகவும் கூறித் தன் பொறுப்பை ஒத்திவைத்தது. இங்கு விவாதத்திற்குரிய 377ஆவது பிரிவு, ‘இயற்கைக்கு மாறான குற்றங்கள்’ (Unnatural offences) என்ற வகைப்பாட்டின் கீழ், இயற்கையின் ஒழுங்கிற்கு முரணாக எந்தவோர் ஆண், பெண் அல்லது விலங்குடன் வேண்டுமென்றே பாலியல் உறவு கொள்ளும் எவருக்கும் ஆயுள் தண்டனையோ அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம் என வரையறுக்கிறது. இதன் மூலம் ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் கொள்ளும் பரஸ்பர உடலுறவு சட்டப்படி குற்றமாகவே நீடித்ததுடன், இந்த இரு வழக்குகளுமே இச்சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டுவருவதை நோக்கியே நகர்ந்தன.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger