மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

33

‘சிதம்பர ரகசியம்’ என்கிற வழக்கு இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்குகிறது. யாருக்கும் தெரியாத மர்மத்தைக் குறிப்பதற்காக இந்த வழக்கு கையாளப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தால் அவ்வூர் புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஊருக்குத் தில்லை என்ற பெயர் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது மக்கள் வழக்கில் இல்லை. சிதம்பரம் பற்றிய புராண நூல்களிலேயே இப்பெயர் கையாளப்பட்டுள்ளது என்கிற நிலையில், தில்லை என்பது பிற்கால பெயராகவே தோன்றுகிறது. ஒரு வகைமாதிரி என்று கருதி அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

தில்லை

பழங்குடி மரபின் வழிபாட்டு இடங்களும் நம்பிக்கைகளும் பிற்கால பெருமரபுகளாக மாறியபோது பழங்குடி மரபின் எச்சங்களாக தல விருட்சங்களும் நந்தவனங்களும் தக்க வைக்கப்பட்டன. கோயிலிருக்கும் இன்றைய இடங்கள் முந்தைய காலத்தில் மரங்களடர்ந்த காடுகளாக இருந்தன என்கிற தொன்மக்கதைகளையும் உருவாக்கிக்கொண்டனர். அங்கிருந்த மரங்களின் பெயர்களால் கோயிலிருக்கும் ஊரின் பெயரையும் உருவாக்கினர். இதனை சைவ மரபு பரவலாகச் செய்திருக்கிறது. மதுரையில் கடம்ப மரங்கள் இருந்ததால், அதற்குக் கடம்ப வனம் என்ற பெயரை சைவ மரபு வழங்குகிறது. இன்றைய மீனாட்சி காட்டிடை இருந்த இயக்கியாக / யட்சியாக இருந்திருக்க வேண்டும். மீனாட்சியம்மன் பற்றிய தல வரலாற்றிலேயே அவள் மலையரசனின் மகளாகக் காட்டிடை இருந்ததாகவும் சிவபெருமான் வெளியிலிருந்து உள்நுழைவதாகவும்தான் காட்டப்படுகிறது. பழங்குடி வழிபாட்டை சைவம் தனதாக்கியது என்கிற எச்சத்தை இக்கதை கொண்டிருக்கிறது. இதற்கானதொரு சான்றுதான் கடம்ப வனம் என்கிற பெயர். இந்த வழக்கத்தின்படியே தில்லை மரங்கள் அடர்ந்திருந்ததால், சிதம்பரத்திற்குத் தில்லை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி சிதம்பரமும், சிதம்பரம் கோயிலும் மரங்களடர்ந்த பழங்குடி வாழ்வின் அடையாளங்களாக இருக்க வேண்டும்.

மதுரை, புகார் போல சிதம்பரம் பழைய இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை. வேறெந்த வகையிலும் மையமான ஊராகவும் அறியப்படவில்லை. நடராஜர் கோயில் மதில்களில் கல்வெட்டுகள் வெட்டப்பட்ட கி.பி.11, 12 ஆகிய நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் குறித்த செய்திகள் இல்லை. ஆனால், சிதம்பரத்தை மையப்படுத்திச் சில பாடல்களும் கதைகளும் உருவாயின.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger