தெற்காசியாவின் மிகச் சிறந்த ஒளிப்படக் கலைஞர்களில் ஒருவரான ரகு ராய், புற்றுநோயுடன் நடத்திய நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று தனது 83ஆவது வயதில் புதுடெல்லியில் காலமானார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய ஒளிப்படக் கலையின் மனசாட்சியாக விளங்கிய அவர், ஒரு தேசத்தின் பரிணாம வளர்ச்சியை, அவ்வளர்ச்சியில் நேர்ந்த முரண்பாடுகளை, துயரங்களை, கொண்டாட்டங்களை வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாத பொறுமையுடனும் நேர்மையுடனும் பதிவு செய்தவர்.
கேமரா என்பது வெறுமனே வரலாற்றைப் பதிவு செய்யும் கருவி என நிலவிவந்த இயந்திரத்தனமான பார்வையை மாற்றி, அது வரலாற்றை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தத்துவார்த்த ஊடகம் என நிறுவியவர் ரகு ராய்.
1942ஆம் ஆண்டு, பிரிக்கப்படாத இந்தியாவின் ஜாங் (Jhang, தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பகுதியில் பிறந்த ரகு ராய், தேசப் பிரிவினையின் வலியைத் தாங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். ஆரம்பத்தில் அரசாங்க சிவில் இன்ஜினியராகப் பணியாற்றிய அவரை, ஒளிப்படக் கலையின் பக்கம் ஈர்த்தவர் அவரது மூத்த சகோதரரும் சிறந்த ஒளிப்படக் கலைஞருமான எஸ்.பால் (S.Paul) ஆவார். 1965இல் தனது சகோதரரைப் பார்க்க டெல்லி சென்றிருந்தபோது, தற்செயலாக ஒரு சிறிய கேமராவைக் கையில் எடுத்த ரகு ராய், கழுதைக் குட்டி ஒன்றைப் படம்பிடித்தார், அந்தப் படம் இலண்டன் டைம்ஸ் (Times) இதழில் வெளியாகி, அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்தது. 1966இல் தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் சண்டே (Sunday), இந்தியா டுடே (India Today) ஆகிய இதழ்களில் பணியாற்றி, இந்திய இதழியலில் ‘போட்டோ-எஸ்ஸே’ (Photo-essay) எனப்படும் ஒளிப்படக் கட்டுரை வடிவத்திற்கு வலுவான இலக்கணத்தை உருவாக்கினார்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then




