கேனிஸ்டிராகோ

ந.அருண் பிரகாஷ் ராஜ்

“உங்கள் ஊரிலெல்லாம் குரங்குக் கறி தின்பீர்களாமே?” எனக் கேட்டதும், தன்னுடைய அகலமான முதுகினை நிமிர்த்திய குமேரோ, உதட்டை ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு என்னை நக்கலாகப் பார்த்தான்.

“ராஜ் மோகன்தான் சொன்னான். ஒருமுறை அந்தப் பக்கமாக அவன் சுற்றுலா சென்றபோது சில கிராமத்தார்களோடு சேர்ந்து குரங்கு வேட்டைக்குப் போனானாம். காட்டில் குரங்குகள் வசிக்கும் பகுதிக்குச் சென்றதும், பெட்டியில் அடைத்துக் கொண்டுவந்திருக்கும் வெடிகளை வெடிப்பார்களாம். அப்பெருத்த சத்தத்திற்குப் பயந்த குரங்குகள், அலறலோடு மரம்விட்டு மரம் தாவ, ஈட்டிகளைக் குறி பார்த்து வீசியெறிந்து வேட்டையாடுவார்களாம். அப்படியா?”

“அவன் ஏதோ நூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்கிறான் என நினைக்கிறேன். இப்போது யாரும் வேட்டைக்கு ஈட்டியை உபயோகிப்பதில்லை. சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக வேண்டுமானால் காட்டில் ஈட்டியோடு சுத்துவார்கள். கிராமத்து வேட்டையென்றால் ரைப்பில்கள்தான்”

“நீயும் குரங்குக் கறி தின்பாயா? குமட்டாதா அது?”

“எங்கள் இனக்குழு சுத்த சைவம். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் சகோதர இனக்குழுக்கள் ஆறுமே சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான். நான் கோழிக்கறியும் மீனும் தின்னத் தொடங்கியதே தில்லி வந்த பிற்பாடுதான்.”

“பொய் சொல்லாதே. ஒரு முழுக் கோழியைப் பத்து நிமிடத்தில் விழுங்குபவன் நீ. திடீரென்றா இத்தனை பெரிய அசைவப் பிரியனாய் மாறிப் போனாய்!”

“எங்கள் ஊர்களில் கிடைப்பது போல சத்தான அரிசியும் கிழங்கும் கூடத்தான் இங்கே கிடைப்பதில்லை. அதுதான் வேண்டும் என்று முழுப் பட்டினியா கிடப்பது. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா உனக்கு…”

“என்ன?”

“நாங்களெல்லாம் சமவெளியில் வசிப்பவர்கள். மலைகளிலே வசிக்கிற சில இனக்குழுக்காரர்கள் நாயை சூப் வைத்துத் தின்பது உண்டு”

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger