மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

30

டங்கை – வலங்கை பிரிவில் சாதிகளுக்கிடையிலான தகுதிகள், உரிமைகள் சார்ந்து மோதலும் பரிமாற்றங்களும் இருந்தன. இந்த வகையில் அவற்றில் ஒருவித நெகிழ்வுத் தன்மை இருந்ததாகத் தெரிகிறது. அதேவேளையில் நெகிழ்விலிருந்து இறுக்கத்தை நோக்கி நகர்ந்ததாகவும் தெரிகிறது. அது இறுக்கமாக மாறத் தொடங்கியபோது சாதிகளிடையே போட்டிகளும் மோதல்களும் நடந்திருக்கின்றன. இடங்கை – வலங்கை பின்புலத்தில் அமையும் நந்தன் கதை அதற்கான உதாரணமாக இருக்கிறது. இக்கதைகளில் நந்தன் பறையர் சாதிக்கான குறியீடு போல இடம்பெறுவதாகவும் பார்க்கலாம். அக்கதைப்படி நந்தன், மன்னன் என்ற மேல்நிலையிலிருந்து கொல்லப்படுகிறான். அதற்குப் பிறகு அவன் குலத்தைச் சேர்ந்தவர்களின் நிலை தாழ்வாக்கப்படுகிறது. இது பறையர்களின் நிலை மேல்நிலையிலிருந்து கீழ்நிலையாக மாறிப்போனதற்கான குறியீடு. சாதி முறை இறுக்கமாவதில் ரத்த உறவை, குறிப்பாக மணவுறவை வரையறைக்குள்ளாக்குவது முக்கியப் பங்கை வகிக்கிறது. நந்தன் கதையில் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறோம். இருவேறு சாதியினர்களுக்குப் பிறந்தது நந்தன் மீதான பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இது சாதி முறை நெகிழ்விலிருந்து இறுக்கத்தை நோக்கிச் சென்ற சூழலை விளக்குகிறது. ஆனால், ஏற்கெனவே நெகிழ்வு இருந்துவந்ததன் தொடர்ச்சியால்தான் நந்தன், தான் எல்லோராலும் ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல சாதிகளிலிருந்தும் மணவுறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறான். ஆனால், இறுக்கமாகிவந்த சாதியமைப்பு அதற்கு அனுமதி மறுக்கிறது. அவனை வெளியே தள்ளுகிறது. அவன் விருப்பத்தைக் குற்றமாகப் பார்க்கிறது. இதனை வலங்கையில் இருந்த பறையர்கள் மீது இடங்கையரின் தாக்குதலாகவே நந்தன் கதை காட்டுகிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger