கோத்த பொய் வேதங்களும் – மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும்” என்று பாடியிருக்கிறார் பாரதி. அன்பை போதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மதங்களின் உள்ளீடு அதிகாரமாக இருந்திருக்கிறது. அந்த அதிகாரம் பலவித வன்முறைகளைச் செய்தேனும் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய மதங்கள் எல்லாவற்றிற்குப் பின்னாலும் கறைபடிந்த வரலாறுகள் இருக்கின்றன. இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப அவற்றில் வேறுபாடுகள் இருக்கலாம். பண்டைய இந்தியாவில் பௌத்தம், ஜைனம் உள்ளிட்ட சமயங்கள் இருந்திருக்கின்றன. வேத மரபை அடிப்படையாகக் கொள்ளாத அவற்றை ஸ்ரமண (சிரமண) சமயங்கள் என்கிறோம். பௌத்தத்திற்கு முந்தியும் சமகாலத்திலும் பல்வேறு மரபுகள் வழங்கப்பட்டிருப்பினும் சமயம் என்னும் நிறுவனப் பண்பை அடைந்ததில் பௌத்தத்தின் இடம் முக்கியமானதாகிறது. மேலும், அது மிஷனரி பண்பைப் பெற்றதிலும் முன்னோடியாக விளங்குகிறது. இந்தியா மட்டுமல்லாது இந்தியாவிற்கு வெளியே தென்கிழக்காசியா முழுவதும் பரவியிருக்கிறது. அவற்றுள் பல்வேறு மரபுகளும் புதிய பிரிவுகளும் உருவாகியிருக்கின்றன. தத்துவம், நம்பிக்கை, வழிபாடு சார்ந்து பல்வேறு வடிவங்களை உருவாக்கியிருக்கிறது. அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் தோன்றிய எந்த மரபும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்க முடியாத அளவிற்கு அது செல்வாக்கு பெற்றிருந்திருக்கிறது. இன்றைய இந்து மதத்தின் பல அம்சங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் திரிந்த நிலையிலும் தக்க வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆய்வுகள் ஒத்துக்கொள்கின்றன. இந்து மதத்தின் ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருக்கும் வேத மரபுக்கு எதிரான நிலைபாட்டைப் பண்டை காலத்தில் தரித்திருந்த அந்த மதத்தின் செல்வாக்கை தன்னுடைய அங்கமாக / அவதாரமாக ஆக்கியதன் மூலம் அமைதி கொண்டிருக்கிறது இன்றைய இந்து மதம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





