புத்தரை ஏன் மனிதர்கள் சரணடைய வேண்டும்? அவர் கடவுளா? அதிசயங்களைச் செய்யக் கூடியவரா? அடுத்த பிறவியின் துயர்களை அறுக்க இன்றே தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்களுக்குப் போதித்து அதனை நிறைவேற்ற பல விரதங்களை, பலியிடுதல்களை, யாகங்களைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துபவரா? என்னை வணங்கிக்கொண்டே சர்வ சதாகாலமும் இருங்கள் உங்களுக்கு எல்லாம் நான் தருவேன் என்று வாக்குத் தந்தவரா? இத்தகைய எந்தக் கேள்விக்கும் இல்லை என்றுதான் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
புத்தரே தன்னை மனிதன் என்று பிரகடனப் படுத்திக்கொண்டவர். நீங்கள் யார் என்ற கேள்விக்கு நான் மனிதன், ஆனால் அறிவு ஒளி பெற்ற மனிதன் என்று வேண்டுமானால் சொல்லலாம் எனக் கூறியவர். புத்தரால் எல்லாம் முடியும் என்று கருதிய பெண், இறந்துபோன தன் ஒரே மகனை எப்படியாவது உயிர்ப்பித்துவிடுவார் என்னும் நம்பிக்கையில் புத்தரிடம் கொண்டுவந்தார். புத்தர் உடனே அந்தக் குழந்தையை உயிர்ப்பிக்கவில்லை. அப்படியானால் தாமதமாக உயிர்ப்பித்தாரா என்று கேட்கிறீர்களா? அல்லது அவர் ஏன் உயிர்ப்பிக்கவில்லை என்று கேட்கிறீர்களா? இரண்டு கேள்விகளும் நமக்கு எழக்கூடியவைதான். ஆனால் புத்தர் இறந்துபோன அக்குழந்தையைக் வைத்துக்கொண்டு அந்தத் தாய்க்கு நிலையாமை என்னும் தத்துவத்தைப் போதிக்கிறார். தாய்க்கு மட்டுமல்ல நமக்கும்தான். இந்த ஊரில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று இறப்பே நடக்காத ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வந்தால் உங்கள் மகனை நான் எழுப்பி விடுகிறேன் என்று புத்தர் கூற, அந்தப் பெண்ணும் அவ்வூரில் இருக்கும் எல்லா வாசற்படிகளையும் ஏறி இறங்கினார். ஆனால், எல்லா வீடுகளிலும் மரணம் நிகழ்ந்திருக்கிறது. யாரிடமும் கடுகைக் கொடுக்கும் தகுதியை அப்பெண்ணால் காணமுடியவில்லை. மரணம் நாம் வாழ்வதைப் போலத்தான் ஒரு வாழ்க்கைச் செயல்பாடு என்பதை மிகவும் துயரத்தோடு புரிந்துகொள்கிறார்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





