மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

32

பௌத்தர்களை இலக்கியங்களில் இழிந்தவர்களாகக் கூறுவது அவர்கள் அவ்வாறு இருந்தார்கள் என்பதால் அல்ல, அவ்வாறு சொல்லப்படுவதாலேயே இழிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்றைக்கு வரலாறாக அறியப்படும் பல தகவல்கள் இவ்வாறு ‘சொல்லப்பட்டு’ வந்ததாலேயே வரலாறு ஆகியிருக்கின்றன.

பௌத்தர்கள் சிறப்புற்றிருந்தார்கள் என்பதால் அவர்கள் செல்வாக்கைக் குறைப்பதற்காகவே இழிகதைகள் கற்பிக்கப்பட்டன. இதுபோன்ற விசயத்தில் மற்றுமோர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் அகத்திலும் புறத்திலும் நிலைத்திருந்த ஒரு பண்பாடு முற்றிலுமாக அழிந்து, திடுமென மற்றொரு பண்பாடு ஏற்கப்பட்டிருக்காது. முந்தைய மரபு அழிந்தது என்பதன் பொருள் அது புறநிலையில் இல்லாமல் போய்விட்டது என்பது வரையிலுமே பொருந்தும். மற்றபடி அதன் அக அடையாளங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் சமூகத்தின் உள்ளார்ந்த அமைப்புகளில் ஒட்டிக் கிடக்கும். அயோத்திதாசர் இதற்கு உள்மெய் என்று பெயரிடுகிறார். அக அடையாளங்களை அழிக்க முடியாததால் புதியவர்கள் அவற்றைச் சற்றே மாற்றியும் திருத்தியும் தங்களுடையதாக மாற்றிக்கொள்கின்றனர். அதன் பழைய அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்கேற்பவும் தங்களுடையவையாகவே அறியப்பட வேண்டும் என்பதற்காகவும் கதைகளை உருவாக்கிக்கொள்கின்றனர். எனவே, எச்சங்களைப் பகுத்தும் தொகுத்தும் வாசிக்கும்போது மறைக்கப்பட்டிருக்கும் முந்தைய மரபு தெரிய வரலாம். இது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் பொருந்தும்.

பறையர் வகுப்பார் குறித்த பழைய குறிப்பாக அறியப்படும் புறநானூற்று பாடல் (335) வரிகளான “பாணன், பறையன், துடியன், கடம்பன்” என்பவற்றில் அவர்களை இழிவாகக் காணும் தொனியில்லை. பிற்கால சோழர் கால கல்வெட்டுகளில் பறையன் என்ற பெயரையும், அவர்களின் தொழில் மற்றும் இருப்பிடத்தைக் காட்டும் குறிப்புகள் மூலம் அப்பெயர் மீதான தாழ்வையும் அறிய முடிகிறது. எனினும் அவர்களின் நிலை முற்றிலும் தாழ்ந்த நிலைக்குச் செல்லாத போக்கையும் காண்கிறோம். சோழர் காலமான 10, 11ஆம் நூற்றாண்டுகளுக்கும் பிந்தைய சில நூறாண்டுகள் கழித்தே அவர்கள் மீதான இழிவையும் புறக்கணிப்பையும் காட்டும் பிரதிகளும் வழக்காறுகளும் பிறந்திருக்கின்றன. பெயர்கள், கதைகள், பாடல்கள், பழமொழிகள், தோற்றம் உள்ளிட்ட அடையாளங்கள் வழியாக இழிவுகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தத் தொடர்ச்சியில்தான் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நந்தனார் கதை எழுதப்பட்டு அவர் பண்ணையடிமை என்ற ‘வரலாறு’ உருவாகியிருக்கிறது.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger