நான் எங்கே விளையாடுவது? – விளையாட்டில் திருநர் உடலைப் புரிந்துகொள்ளுதல்

இமான் ஹெக்டே | தமிழில்: கனகா வரதன்

டுவார்டோ கலியானோவின் ‘ஃபூட்பால் இன் சன் அண்ட் ஷேடோ’ (1995) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட “ஃபூட்பால் இஸ் எ பிளஷர் தட் ஹர்ட்ஸ்” என்ற மேற்கோள், நான் உருவாக்கிய காமிக்ஸ் புத்தகத்தின் தலைப்பாகும். நான் தொழில்முறையாக கால்பந்து விளையாடுவதைக் கைவிட்டு, திருநர் அடையாளத்தின் பொருட்டு பாலின உறுதிப்பாட்டு மருத்துவ நடைமுறைகளைத் துவங்கியிருந்த காலகட்டத்தில் இந்தக் கதை துவங்குகிறது. என் உறுதிப்பாட்டு நடைமுறைகள் சீராகத் தொடர்ந்தபோதும், நான் மிகவும் நேசித்த விளையாட்டை இழந்ததும், பின்னர் அதைத் தொழில்முறையாக விளையாடும் எண்ணத்தைக் கைவிட்டதும், சிக்கலான எனது சிகிச்சை காலகட்டத்தை எவ்வாறு மேலும் சிக்கலாக்கியது என்பதை இந்தச் சிறிய காமிக்ஸ் புத்தகம் விளக்குகிறது. இதை வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமெனில், எனது சிகிச்சைக்கு ஒரு தொடக்கமும் முடிவும் இருந்தது. ஆனால், கால்பந்தை இழந்ததால் ஏற்பட்ட துயரமும் சோகமும் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

2023இல் எனது முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியபோது, நான் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது, ஆணாகத் தோற்றமளிக்காதது குறித்து நான் ஆழ்ந்த விழிப்புடனும் தயக்கத்துடனும் இருந்தேன். என் உடல் மாறிக்கொண்டிருந்தாலும், அது மெதுவாகவே நிகழ்ந்தது. முதல் வாரத்தில், என் வகுப்புத் தோழர்களில் பலர் என் சுட்டுப்பெயர்களையும் (pronouns) அடையாளத்தையும் கேட்டனர். ஆரம்பத்தில் இது அக்கறையாகத் தோன்றினாலும், விரைவில் இது பாரபட்சமானது என்பது தெளிவாகியது. நான் ஆணா, பெண்ணா என்று அவர்களால் தெளிவாகப் பொருத்த முடியாததால், என்னிடம் மட்டுமே இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதே கேள்விகளை நான் மற்றவர்களிடம் கேட்டபோது, தங்களின் பாலினம் வெளிப்படையானது எனவும், பெரும்பாலும் புண்பட்டது போலவும் காட்டிக்கொண்டனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger