நிலமும் சாதியும்: இந்திய ஜனநாயகத்தின் முடிவுறாக் கேள்வி

பாஸ்கர் மணிமேகலை

ந்தியாவில் நிலம் (land) என்பது வெறும் மண் (soil) அல்ல. மண் என்பது உற்பத்தி சார்ந்தது, நிலம் என்பது வாழ்வுரிமை சார்ந்தது. அது அம்மக்களுக்கான ஜனநாயகக் குரல். ஒரு குடும்பத்திற்கு நிலம் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி, அந்தக் குடும்பத்தின் உணவுத் தன்னிறைவோடு மட்டும் முடிவதில்லை. அந்தக் குடும்பம் யாரிடம் கடன் கேட்க வேண்டும், யாரிடம் வேலை கேட்க வேண்டும், யாரிடம் தலைகுனிய வேண்டும், யாருடைய வயலில் கூலியாக நிற்க வேண்டும் என்பவற்றையும் அது தீர்மானிக்கிறது. அதனால்தான் இந்தியாவில் நிலப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் சாதிப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியாது. சாதியைப் புரிந்துகொள்ளாமல் நிலப் பிரச்சினையையும் புரிந்துகொள்ள முடியாது. இரண்டும் தனித்தனி விஷயங்கள் அல்ல. இந்தியக் கிராமச் சமூகத்தில் அவை ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.

மூன்று நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலம் யாரிடம் இருந்து யாரிடம் சென்றது என்பதை இன்று புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. 2011 சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு, இந்தியக் கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு (சுமார் 56 சதவீதம்)  வேளாண் நிலம் இல்லை என்று சொல்கிறது. இதனை வெறும் ஏழ்மை பற்றிய கணக்காகப் பார்க்க முடியாது. நீண்டகாலமாக நடந்து வரும் நிலப் பகிர்மான அரசியல். 2000களின் நடுப்பகுதியில் வெளியான தேசிய மாதிரி அளவீட்டுத் தரவுகள் (National sample survey) இன்னும் கடுமையான உண்மையைக் காட்டின. பட்டியல் சாதியினரிடையே நிலமில்லாதோர் சுமார் 78 சதவீதம். மற்ற சமூகக் குழுக்களில் அது சுமார் 57 சதவீதம். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான ஆய்வுகள், வேளாண்மையில் இருக்கும் தலித் உழைப்பாளர்களில் சுமார் 71 சதவீதம் பேர் பிறர் நிலத்தில் கூலிகளாக வேலை செய்கிறார்கள் என்று சொல்கின்றன. தலித் குடும்பங்களில் சுமார் 58 சதவீதத்துக்கு நிலமே இல்லை என்பதும் அதில் தெரிகிறது. 2015-16 வேளாண் கணக்கெடுப்பு இந்தப் படத்தை இன்னும் தெளிவாக்குகிறது. இந்திய மக்கள்தொகையில் சுமார் 16.6 சதவீதமான பட்டியல் சாதியினர், வேளாண் நிலத்தில் வெறும் ஒன்பது சதவீதத்தையே சாகுபடி செய்கிறார்கள். அவர்களிடம் உள்ள நிலங்களிலும் பெரும்பாலானவை மிகச் சிறிய துண்டுகள். அவர்களின் நில உடைமைகளில் 92 சதவீதம் குறு நிலங்கள். சராசரியாக 0.78 ஹெக்டேர் அளவுதான்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger