ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, இந்த விசாரணை வெவ்வேறு நிலையை எட்டும் என்று தெரிகிறது. எப்ஸ்டீன் பைல்ஸ் கொடுமையை உலகமே அதிர்ந்து பார்த்த சில மாதங்களுக்குள்ளாகவே, தமிழ்நாட்டிலும் அத்தகைய நிகழ்வு பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள்.
இந்தச் சூழலில், வெளிவந்துள்ள இந்த வழக்கின் துவக்ககால விசாரணையின் போதாமைகளையும், அதற்கான காரணங்களையும் ஆய்வுக்குட்படுத்துவதற்கு முன், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சார்ந்த விவகாரங்களையும் தமிழ்ச் சமூகம் அண்மைக் காலங்களில் எப்படிக் கையாண்டு வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்வது முக்கியம்.
கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாகச் செயல்படத் தொடங்கியதும், தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது என அன்றாடச் செய்திகளைப் பேசுபொருளாக்கி, அவை புதிய ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் நிகழ்கிறது என்கிற கருத்துருவாக்கத்தை ஒருவகையில் வெற்றிகரமாகச் செய்துவிட்டது. சமூகத்தில் தனிநபர்களால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்குரிய காரணத்தைக் கண்டடைந்து, துரிதமாகத் தொலைநோக்குத் திட்டம் வகுப்பதும் அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் ஆளும் அரசுகளையே சேரும். அந்த வகையில், சமூகத்தின் அன்றாட வன்முறைச் சம்பவங்களை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை திமுக பேசுபொருளாக்குவதன் மூலம், அவை ஊடக விவாதமாகவும் மாறியிருக்கிறது.
இதே அணுகுமுறையோடு கடந்த 2021–2026 திமுக ஆட்சியை எதிர்கொள்ளவும், விமர்சிக்கவும், வலுவான எதிர்க்கட்சியோ, சமரசமில்லாத கூட்டணிக் கட்சிகளோ இல்லாமலிருந்தது. தி.மு.க.வின் ஐ.டி விங் குழுக்கள் அரசின் நலத் திட்டங்களை மட்டுமே பிரதானப்படுத்தி பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கி, இச்சட்ட-ஒழுங்கு பிரச்சினையை மழுங்கடித்துப் பின்னுக்குத் தள்ளின. திமுக தோல்வியைத் தழுவ இச்சட்ட – ஒழுங்கு பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
ஒரு சமூகத்தில் நிகழும் குற்றங்களுக்கு முழுமையான காரணமாக ஆளும் அரசைக் கூறிவிட முடியாது. அதேவேளையில், அத்தகைய வழக்குகளை அந்த அரசு எத்தனை நேர்மையாக எதிர்கொள்கிறது என்பதைக் கொண்டே அதன் நிர்வாகத் திறனை மதிப்பிட முடியும்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. அதன் உச்சமாக, 2024ஆம் ஆண்டு 10,046 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 837 குற்றங்கள் நடந்திருக்கின்றன. 2023இல் 6,968 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அடுத்த ஓராண்டுக்குள் (2023–2024) 40% குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிராக ஙிழிஷி மற்றும் மிறிசி பிரிவுகளில் பதிவான வழக்குகளைச் சேர்க்காமல், போக்சோ பிரிவின் வழக்குகள் மூலம் மட்டுமே இத்தனை ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்சோ வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு அரசு முன்னிலை வகித்தாலும், அவ்வழக்குகள் குறித்த விசாரணைகளில் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை. ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் போக்சோ வழக்கு உள்ளிட்ட மற்றுமொரு வழக்கையும் திமுக அரசின் மோசமான

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





